• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளதடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஐஜி ஆய்வு

policeseithitv by policeseithitv
November 11, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளதடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஐஜி ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வடகிழக்கு பருவமழை மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும்போது ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு தயார் நிலையில் உள்ள பேரிடர் மீட்புப் படையினர், அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் பேரிடர் கால மீட்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் முன்னிலையில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தலைவர் அபின் தினேஷ் மொடக், இ.கா.ப இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து ஆங்காங்கே கனமழை பெய்து வருவதை முன்னிட்டு தமிழக அரசு வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகளுக்காக தமிழகம் முழுவதும் கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய திருநெல்வேலி சரகத்திற்கு சென்னை பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை தலைவர் (Inspector General of Police, Economic Offences Wing, Chennai) அபின் தினேஷ் மொடக் இ.கா.ப நியமிக்கப்பட்டுள்ளார். அவர் திருநெல்வேலி சரகத்தில் பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் முன்னிலையில் காவல்துறை தலைவர் அபின் தினேஷ் மொடக் இ.கா.ப இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் அதிகம் உள்ள இடங்கள், குளங்கள் மற்றும் ஆபத்தான ஆற்றங்கரை பகுதிகள் குறித்தும், பேரிடர் காலத்தில் வெள்ளத்தில் சிக்கும் பொதுமக்களை மீட்பது குறித்தும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களை பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பளார் கார்த்திகேயன், சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், தூத்துக்குடி நகரம் காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

Previous Post

வேதாரண்யத்தில் மழை – உப்பள பகுதிகள் தண்ணீரில் மூழ்கின- உப்பள ரோடுகள் சேதம்

Next Post

சாலையோரம் பரிதாபமாக கிடந்த ஒருவரை தோல் மீ்து தூக்கிசென்று உயிரை காப்பாற்றிய டி.பி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி

Next Post
சாலையோரம் பரிதாபமாக கிடந்த ஒருவரை தோல் மீ்து தூக்கிசென்று உயிரை காப்பாற்றிய டி.பி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி

சாலையோரம் பரிதாபமாக கிடந்த ஒருவரை தோல் மீ்து தூக்கிசென்று உயிரை காப்பாற்றிய டி.பி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In