வேதாரண்யத்தில் மழை வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் வளாகம் நீரால் சூழ்ந்துள்ளது
வேதாரண்யம் நவ 10
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் ஆன்மீகத்திலும், வரலாற்றிலும் சிறப்பு பெற்றது. இங்கு அகத்தியருக்கு சிவபெருமான் திருமணக் கோலம் காட்டிய சிறப்பும், வேதங்கள் பூஜித்து மூடி சென்ற கதவை அப்பரும் திருஞானசம்மந்தரும் தேவார திருப்பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாறு பெற்ற ஸ்தலம்.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 14.8 செ.மீ கொட்டித் தீர்த்த கனமழையால் வேதாரண்யம் அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் கோவில் முழுவதும் தண்ணீர் தேங்கியது. இதனால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மிகவும் அவதிப்பட்டனர்.
தண்ணீரை வெளியேற்ற அரசு தரப்பினரும், கோவில் நிர்வாகத்தினரும் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

