வேதாரண்யத்தில் மழை – உப்பள தொழிலாளர் குடியிருப்பில் தண்ணீர் புகுந்தது
நகராட்சி நிர்வாகம் சார்பில் நிவாரண முகாமில் தங்க வைப்பு
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று ஒரே நாளில் 14.8 செ.மீ கொட்டித் தீர்த்த கனமழையால் உப்பள பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. மேலும் உப்பள தொழிலாளர் குடியிருப்பில் தண்ணீர் புகுந்ததால் அங்குள்ள மக்களை நகராட்சி சார்பில் பாத்திரமாக மீட்டு அரசு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் அந்த பகுதியில் உள்ள தண்ணீரை வெளியேற்ற அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.

செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

