தூத்துக்குடியில் சாலை கட்டமைப்பு என்பதே கேள்விக்குறியாக உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குறுகிய சாலைகளை இரண்டாக பிரித்து கான்கிரீட் சாலை அமைப்பது வேடிக்கையாக உள்ளது.
அந்த காலத்தில் மக்களிடம், அனுபவம் உள்ளவர்களிடம் கேட்டு பணிகள் நடந்ததால் சிறப்பாக இருந்தது. தற்போது பொறியாளர்கள் அதிகம் இருந்தும், கட்டமைப்பு இல்லாமல் பணிகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, கடந்த 10 தினங்களாக பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட ராஜகோபால் நகர் 2வது தெரு பார்வதி அம்மாள் காம்பவுண்ட்டில் மழைநீர் சாக்கடை போல் தேங்கியுள்ளது.

இப்பகுதியில் மழைநீர் தேங்கி இருப்பதால் அதிக துர்நாற்றம் வீசி வருகிறது. பெரியவர் முதல் பச்சிளம் குழந்தைகள் வரை வசித்து வரும் குடியிருப்பு பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயகரமான சூழல் நிலவுகிறது.
மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
வரி வசூலிப்பது மட்டும்தான் மாநகராட்சி பணியா..! இது நாடா… இல்ல வெள்ளக்காடா… இத கேட்க யாரும் இல்ல தோழா.!!..என்று புலம்பி வருகின்றனர் அப்பகுதி பொதுமக்கள்.
செய்தி தொகுப்பு: நமது சிறப்பு செய்தியாளர்

