தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு 25-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் 75-ம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 09.11.2021 தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய பெண்கள் ஆணையத்துடன் இணைந்து பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கமானது தூத்துக்குடியில் நடைபெற்றது.
அதில் மாண்புமிகு தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிபதி /தலைவர், திருமதி.S.சுமதி,M.L., மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தூத்துக்குடி அவர்கள் தலைமை தாங்கினார். மேற்படி விழிப்புணர்வு கருத்தரங்கில் Resource Persions திருமதி.S.சொர்ணலதா மற்றும் திருமதி.V.நீலவேணி அவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை எடுத்துரைத்தார்கள்.

மாண்புமிகு மாவட்ட நீதிபதி தனது தலைமையுரையில் பெண்களுக்கு உண்டான இலவச சட்டத்திட்டத்தை பற்றியும், பெண்கள் நாட்டில் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றும், மேலும் கருத்தரங்கில் கலந்து கொண்ட பெண்களிடம் இந்த கருத்தரங்கத்தை பயன்படுத்தி பல மக்களுக்கு இதை தெரிய படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
மேற்படி பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் /சார்பு நீதிபதி திருமதி.M.பிரீத்தா, M.L., அவர்கள் செய்திருந்தார்கள்.

