விருதுநகர் மாவட்டத்திலுள்ள பத்து வட்டங்களுக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களிலும் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் 27.10.2021 முதல் 31.12.2021 வரை பிரதி வாரம் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்கள் தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் கிராம நிர்வாக அலுவலர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் ஆகியோர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று தகுதியான மனுக்களுக்கு தமிழ் நிலம் மென்பொருளில் பதிவேற்றம் செய்து கணினியில் எளிய திருத்தங்கள் மேற்கொண்டு பயனாளிகளுக்கு பாட்டா மாறுதலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சிவகாசி வட்டத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம் திருத்தங்கல் குறுவட்டம், கீழத்திருத்தங்கல் கிராம உட்கடை செங்கமலப்பட்டி கிராம ஊராட்சி மன்ற வளாகத்தில் வைத்து நடைபெற்றது. மேற்படி சிறப்பு முகாமில் மொத்தம் 207 மனுக்கள் வரப்பெற்றது.
அதில் 32 மனுக்களின் மீது அன்றே தீர்வு காணப்பட்டு சிவகாசி வருவாய் வட்டாட்சியரால் உத்தரவுகள் மனுதாரர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் மேற்படி முகாமில் 11 நபர்களுக்கு கோரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில்சிவகாசி வருவாய் வட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் ஆனந்தராஜ் தனிவட்டாட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சிவகாசி, முருகேசன் செங்கமலப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், லட்சம் மண்டல துணை வட்டாட்சியர் சிவகாசி, சுப்புராஜ் தலைமை நிலஅளவர் சிவகாசி, ஜெயப்பாண்டி வட்ட வழங்கல் அலுவலர் சிவகாசி, ஆரோக்கியபிரபாகர் வருவாய் ஆய்வாளர் திருத்தங்கல், செல்லச்சாமி கிராம நிர்வாக அலுவலர் கீழத் திருத்தங்கல், வீரய்யா கிராம உதவியாளர் கீழத் திருத்தங்கல் மற்றும் சிவகாசி வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் கலந்து கொண்டனர். கிராம மக்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தினார்கள்.
செய்தி தொகுப்பு:
எம் மாரிமுத்து மாவட்ட நிருபர்
பாக்கியராஜ் மாவட்ட புடைப்பட கலைஞர்

