• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்திற்கு உட்பட்ட 21வார்டுகள் மற்றும் 36 ஊராட்சிகளில் டேங்கர் மூலம் தண்ணீர் சப்ளை – பொதுமக்கள் மகிழ்ச்சி

policeseithitv by policeseithitv
November 8, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்திற்கு உட்பட்ட 21வார்டுகள் மற்றும் 36 ஊராட்சிகளில் டேங்கர் மூலம் தண்ணீர்  சப்ளை – பொதுமக்கள் மகிழ்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யம் நவ 8
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் நகராட்சி கடற்கரை சார்ந்த பகுதியாகும். இங்கு நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மையுடையதாக இருந்ததால் கொள்ளிடம்-வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது. இதனால் கொள்ளிடம் முதல் வேதாரண்யம் வரையிலான சுற்றுவட்டார கிராம மக்கள் குடிநீர் தேவை பூர்த்தி அடைந்தது.
ஆனால் அந்த திட்டத்தில் கடந்த ஆறுமாத காலமாக சரிவர தண்ணீர் விநியோகம் நடைபெறவில்லை. வேதாரண்யம் நகராட்சி பகுதியில் வாரத்தில், மாதத்தில் இரண்டு முதல் ஆறுநாட்கள் தண்ணீர் விநியோகம் நடைபெறுவது இல்லை. கிராமப்புறத்தில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே விநியோகம் நடைபெறுவதாக கூறுகின்றனர். காரணம் கேட்டால் பராமரிப்பு என காரணம் சொல்கின்றனர். எந்தவிதமான முறையான முன் அறிவிப்பும் இல்லை. இதனால் பொதுமக்கள் தண்ணீர் தேடி அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது .


வேதாரண்யம் நகராட்சியில் உள்ள 21 வார்டு மற்றும் 36 ஊராட்சிகளில் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். திருவிழா காலமான தற்போது 5 நாட்களாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட விநியோகம் நடைபெறவில்லை. இதனால் மக்கள் குடிநீர் பைப்புகளை தேடி மழையிலும் அலைகின்றனர். இந்த செய்தி போலீஸ் செய்தியில் நவ 03 ல் வெளியானது. அதன் எதிரொளியாக அரசு எந்திரம் முடுக்கிவிடப்பட்டு தற்போது வேதாரண்யத்திற்கு உட்பட்ட 21வார்டுகள் மற்றும் 36 ஊராட்சிகளில் தண்ணீர் டேங்கர் மூலம் தண்ணீர் இரண்டு நாட்களாக சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
தண்ணீர் தேடி பல கிலோ மீட்டர் தூரம் அலைந்த பொதுமக்கள் தற்போது மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் தண்ணீர் பிரச்சனைக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

Previous Post

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கான அறிவுரை

Next Post

கடலில் தவறி விழுந்த ஆறுகாட்டுத் துறை மீனவர் இலங்கையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது

Next Post
கடலில் தவறி விழுந்த ஆறுகாட்டுத் துறை மீனவர் இலங்கையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது

கடலில் தவறி விழுந்த ஆறுகாட்டுத் துறை மீனவர் இலங்கையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In