வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கான அறிவுரை
தென்கிழக்குவங்காளவிரிகுடாமற்றும் அதைஒட்டிய இந்தியபெருங்கடலில் சராசரிகடல் மட்டத்திலிருந்து 4.5 கி.மீ. உயரம் வரைமேல்காற்றுசுழற்சிஉள்ளது. அதன் தாக்கத்தின்கீழ் தென்கிழக்குவங்கக்கடல் மற்றும் சுற்றுப்புறப்பகுதியில் நவம்பர் 09.11.2021-இல் குறைந்தகாற்றழுத்ததாழ்வுப்பகுதி உருவாகிபுயலாக மாறவாய்ப்புள்ளது. இது அடுத்த 48 மணிநேரத்தில் வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கிவர வாய்ப்புள்ளது. இதன் காரணமாகநவம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடலில் மணிக்கு 40 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்றுவீசக்கூடும்.இதனால் கனமழைபெய்யவாய்ப்புள்ளது.
எனவேமீனவர்கள் யாரும் மீன்பிடிக்ககடலுக்குசெல்லவேண்டாம் எனவும்,கடலுக்குசென்றமீனவர்கள் 09.11.2021-க்குள் கரைக்குதிரும்பவும் அறிவுறுத்தப்படுகிறது.
தொடர் மழையின் காரணமாக பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்க செல்வதை தவிர்க்கவேண்டும். தாழ்வானபகுதிகளிலும்,நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவேண்டும். மழைஃவெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்கக்கூடாது. வெள்ளபெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லவேண்டும்.
பொதுமக்கள் தங்களது ஆதார்ஃகுடும்பஅட்டைஉள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
பேரிடர் காலங்களில் பொதுமக்கள் கீழ்க்கண்டுள்ளபொருட்களை முன்னெச்சரிக்கையாக வைத்திருக்க வேண்டுமென மாவட்டஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மெழுகுவர்த்திமற்றும் தீப்பெட்டி, ஒருவாரக்காலத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் (உணவு வகைகள்),எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய், மருந்து மற்றும் பால் பவுடர், மின் விளக்குகள் மற்றும் உபரிபேட்டரிகள், சுகாதாரத்தை பேணிகாக்க தேவையானபொருட்கள், முகக்கவசம் ஆகியவற்றை வைத்திருக்கவேண்டும்.
மேற்கண்டுள்ள அறிவுரைகளை பேரிடர் காலங்களில் வலுவாதுபின்பற்றுமாறு நாகப்பட்டினம் மாவட்டஆட்சித்தலைவர் மருத்துவர் .அ.அருண்தம்புராஜ்,இ.ஆ.ப. அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

