வேதாரண்யம் நவ 05
நாகப்பட்டினம் மாவட்டம் , வேதாரண்யம் காவல்சரகம், ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் வ 35 த.பெ.சம்பத் என்பவருக்கு சொந்தமான பதிவில்லா பைபர் படகில் 1 ) பழனி .வயது 40 த.பெ.ராயப்பன், வடக்கு தெரு ஆறுகாட்டுத்துறை,2) கேசவன் வ 32, த.பெ.கண்ணன், வடக்குதெரு , ஆறுகாட்டுதுறை, 3)திருமால் வ 33, த.பெ.தமிழ்செல்வம், ஆகிய மூன்று நபர்களும் 02.11.2021 ஆம் தேதி பிற்பகல் 4 மணிக்கு ஆறு காட்டுத்துறை, கடற்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்றவர்கள் மாலை 5.00 மணியளவில் பழனி 40 த/பெ ராஜப்பன், வடக்குதெரு என்பவர் கடலில் தவறி விழுந்துவிட்டார். இவர்கள் சென்ற படகை தேடி ஆறு காட்டுத்துறை மீனவர்கள் இரண்டு படகுகளில் சென்று தேடி வருகின்றனர் . இன்று வரை அவர் கிடைக்கவில்லை. இந்திய கடலோர படையும் இலங்கை கடலோர படையும் சேர்ந்து தேட ஆறுக்காட்டுதுறை மீனவர்கள் இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்.
