வேதாரண்யம் அருகே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது .
வேதாரண்யம் நவ 05
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கடற்கரையிலிருந்து வேதாரண்யம் காவல் சரகம் மணிகண்டன் வயது 33 த/பெ ராஜங்கம் மீனவர் காலனி புஷ்பவனம் IND TN 06 MO 6583 படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த மூன்று மூட்டைகளில் சுமார் 96 கிலோ கஞ்சா இருந்தது . கடலோர காவல் படையினருடன் க்யூ பிரிவு காவலர்களும் சேர்ந்து ரோந்து சென்ற போது படகில் இருந்த கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர் .
இதன் மதிப்பு 10 லட்சம் ரூபாய் ஆகும். படகு உரிமையாளர் மணிகண்டனை கைது செய்து கடலோர காவல் குழும காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

