• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் – எஸ்பி ஜெயக்குமார் 

policeseithitv by policeseithitv
November 3, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கொலை, கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடிகள் 6 பேர் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
அரசு விதித்துள்ள நெறிமுறைகளை பின்பற்றி விபத்தில்லா தீபாவளியாக மகிழ்ச்சியுடன் கொண்டாடுமாறு தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு எஸ்பி ஜெயக்குமார் தீபாவளி  நல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடவும், உங்களுக்கும்,  உங்களால் மற்றவர்களுக்கும் எவ்வித தீங்கும் ஏற்படாமல் பாதுகாப்பான முறையில் விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாட பொதுமக்கள் அனைவருக்கும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசு தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே காலையில் 1 மணி நேரமும், மாலையில் 1 மணி நேரமும் பட்டாசு வெடிக்க உத்தரவிட்டுள்ளது. பேரியம் உப்பு கலந்து தயாரிக்கப்பட்ட வெடிபொருட்களையும், சரவெடி பட்டாசுகளையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மற்ற சாதாரண பட்டாசுகளை பயன்படுத்தலாம்.
அவ்வாறு பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகள் பெற்றோர்கள் கண்காணிப்பில்தான் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க விடாமல், நீங்கள் அருகில் இருந்துகொண்டுதான் வெடிக்கவைக்க வேண்டும். பக்கத்தில் தண்ணீர் நிரம்பிய வாளி மற்றும் மணல் வாளிகளை வைத்திருக்க வேண்டும். திறந்த வெளியில் தான் பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது காலணிகள் அணிந்திருக்க வேண்டும்.
பாலிஸ்டர் ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்கக் கூடாது. ஏனெனில், அவை எளிதில் தீப்பற்றும் தன்மைகொண்டவை. பாட்டில்களில் வைத்து ராக்கெட் விடுவது, பட்டாசைப் பற்றவைத்து கையால் தூக்கிப்போடுவது போன்றவை மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.பொதுமக்கள் அதிகம் உள்ள இடங்கள், கூரை வீடுகள் உள்ள இடங்கள், பட்டாசு விற்பனை கடைகள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற இடங்கள் அல்லது அதற்கு மிக அருகாமையில் பட்டாசுகள் வெடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
சானிடைசர் பயன்படுத்திவிட்டு பட்டாசு வெடிக்க கூடாது. பட்டாசு வெடித்து விலங்குகளை துன்புறுத்துதல் மற்றும் அச்சுறுத்ததல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.தீபாவளி பண்டிகையின்போது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் பொதுமக்கள் அவரவர் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவித்துவிட்டுச் சென்றால், அந்தப்பகுதிக்கு காவலர் அதிக அளவில் ரோந்து சென்று கவனிப்பார்கள்.
மேலும் பொது இடங்களில் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு  இடையூறு விளைவிப்பவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள்,  இரு சக்கர வாகன வேகப்பந்தயம் வைத்து செல்லுதல் (Bike Race) பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பி அதிக வேகத்தில் செல்வது, போதைப்பொருள் கடத்தல், விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், 3 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றும்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Previous Post

தமிழக முதலமைச்சர் தலைமைச் செயலக வளாகத்தில் மரம் விழுந்ததில் காயமடைந்த காவலர், தீயணைப்பு வீரரை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல்

Next Post

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல “லே” செயலாளர் கிப்ட்சன்-ஐ கேவிகே நகர் சேகர கமிட்டி அங்கத்தினர்கள் சார்பாக நேரில் சந்திப்பு

Next Post
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல “லே” செயலாளர் கிப்ட்சன்-ஐ  கேவிகே நகர் சேகர கமிட்டி அங்கத்தினர்கள் சார்பாக நேரில் சந்திப்பு

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல "லே" செயலாளர் கிப்ட்சன்-ஐ கேவிகே நகர் சேகர கமிட்டி அங்கத்தினர்கள் சார்பாக நேரில் சந்திப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In