கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு அமுலில் உள்ள நிலையில் போலீஸ் பொதுமக்கள் பொது நல அறக்கட்டளை சார்பாக 150 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருள்கள் அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன் வழங்கினார்.
கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு அமுலில் உள்ளதால் பொதுமக்கள் இயல்பு நிலை அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் யாருடைய ஆதரவு இன்றி சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பலர் கஷ்ட சூழ்நிலையில் இருப்பதை அறிந்து ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு போலீஸ் பொதுமக்கள் பொதுநல அறக்கட்டளை சார்பாக அதன் நிறுவன தலைவர் SNR அவர்களின் முயற்சியில் மனித நேயத்தோடு நிவாரண பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அரக்கோணம் அடுத்த ஈஸ்லாபுரம் என்ற கிராமத்தில் வாழ்வாதாரம் இழந்த 150 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருள்கள் அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன் அவர்கள் அவர்கள் பொற்கரங்களால்வழங்கப்பட்டது அதன் பின்பு மரக்கன்று நடப்பட்டது . போலீஸ் பொதுமக்கள் பொது நல அறக்கட்டளை சார்பாக சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது அதனை அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன் அவர்களுக்கு போலீஸ் பொதுமக்கள் பொதுநல அறக்கட்டளை சார்பாக அதன் நிறுவன தலைவர் SNR வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் சுமார் 250 மேற்பட்டவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டனர் SNR அவர்களின் இந்த மனித நேய பணிகளை டிஎஸ்பி மனோகரன் அவர்கள் பொதுமக்கள் ஆகியோர் மனதார பாராட்டி வரும் நிலையில் போலீஸ் செய்தி இணையதள தொலைக்காட்சி குழுமம் சார்பில் ராயல் சல்யூட்

