தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கன்மாய் சீரமைக்க பூமி பூஜை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 32 ஆயிரம் வாக்களர்களை கொண்ட பெரிய ஊராட்சியாக மாப்பிள்ளையூரணி இருந்து வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று தலைவர் துணைத்தலைவர் வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை யொட்டிமாப்பிள்ளையூரணியில் உள்ள கன்மாயை தூர் வாரி மழை காலத்திற்குள் சீரமைத்து தண்ணீர் தேங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இதனை அடுத்து பொதுமக்கள் நலன் கருதி தூர் வாரும் பணிக்கான பூமிபூஜை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஊராட்சி ஓன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர், ஊராட்சி மன்ற உறுப்பினர் மகேஷ்வரி காமராஜ், மற்றும் கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு ஆத்தி

