போலி ஆவணம் மூலம் பெற்றவை 3 கோடி நிலம் மீட்பு
தென்காசி மாவட்டம் வைரம்ஸ் நகரைச் சேர்ந்த முருகன் இவருக்கு நெல்லை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பற்ப குளத்தில் 3 கோடி மதிப்புள்ள ஒரு ஏக்கர் 29 சென்ட் நிலம் உள்ளது
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பற்பகுளத்தில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தை முருகன் விற்பனை செய்து வந்தார் அப்போது அந்த நிலம் போலி ஆவணம் மூலம் ஏற்கனவே விற்பனையானது தெரியவந்தது.
தனது நிலத்தை மீட்டு தரக்கோரி எஸ்.பி .அலுவலகத்தில் முருகன் மனு அளித்தார்
மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு டி.எஸ்.பி. ஜெயபால் பர்னபாஸ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி போலி ஆவணம் மூலம் விற்பனையான ரூபாய் 3 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்டனர் நிலத்திற்கான ஆவணத்தை எஸ்பி மணிவண்ணன் உரிமையாளர் முருகனிடம் ஒப்படைத்தார்.

