நாகப்பட்டினம்மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துதுறைவளர்ச்சித்திட்டப் பணிகள் தொடர்பாகமாண்புமிகுசுற்றுச்சூழல் காலநிலைமாற்றத்துறைமற்றும் இளைஞர் நலன் விளையாட்டுமேம்பாட்டுத் துறைஅமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் 29.10.2021 அன்று நடைபெற்றது.
நாகப்பட்டினம்மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துதுறைவளர்ச்சித்திட்டப் பணிகள் தொடர்பாகமாண்புமிகுசுற்றுச்சூழல் காலநிலைமாற்றத்துறைமற்றும் இளைஞர் நலன் விளையாட்டுமேம்பாட்டுத் துறைஅமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின்போதுமாவட்டஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இ.ஆ.ப.,நாகப்பட்டினம்நாடாளுமன்றஉறுப்பினர் திரு.எம்.செல்வராசு,தமிழ்நாடுமீன்வளர்ச்சிகழகதலைவர் திரு.என்.கௌதமன்,நாகப்பட்டினம் சட்டமன்றஉறுப்பினர் திரு.ஜெ.முகமது ஷா நவாஸ்,கீழ்வேளுர் சட்டமன்றஉறுப்பினர் திரு.வி.பி.நாகைமாலிஆகியோர் உடனிருந்தனர்.
இக்கூட்டத்தில் மாண்புமிகுசுற்றுச்சூழல் காலநிலைமாற்றத்துறைமற்றும் இளைஞர் நலன் விளையாட்டுமேம்பாட்டுத் துறைஅமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது….
மாண்புமிகுதமிழகமுதலமைச்சர் அவர்கள் மாவட்டங்களில் வளர்ச்சித்திட்டப் பணிகளைகண்காணித்துதுரிதப்படுத்திடமாண்புமிகுஅமைச்சர் பெருமக்களைநியமித்துள்ளார்கள்.அதனடிப்படையில் இன்றையதினம் நாகப்பட்டினம்மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் தொடர்பாகதுறைவாரியாகஆய்வுமேற்கொள்ளப்பட்டது.
மக்களுக்குதரமானசாலை,குடிநீர்,தெருவிளக்கு உள்ளிட்டஅடிப்படைவசதிகளைவழங்கிடவேண்டும். மக்களிடம் பெறப்படும் கோரிக்கைமனுக்களுக்குஉடனடிதீர்வுகாணப்படவேண்டும்.நகாராட்சி,பேரூராட்சி,அரசுஆரம்பசுகாதாரநிலையங்கள்,அரசுமருத்துவமனைகளை தூய்மையாகவைத்திருக்கவேண்டும்.
மேலும்,வடகிழக்குபருவமழைகாலங்களில் தேங்கும் கழிவுநீரைஉடனுக்குடன் கழிவுநீர் தேங்காமல் உடனுக்குடன் அப்புறப்படுத்ததுரிதநடவடிக்கைஎடுக்க அலுவலருக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்குபருவமழையையொட்டிமுன்னேற்பாடுபணிகள் எடுக்கபட்டுள்ளது.அதன்படி புயல்,வெள்ளம் போன்ற இயற்கைபேரிடர் காலங்களில் மக்கள் பாதிக்காதவகையில் அவர்களைபாதுகாப்பாகதங்கவைப்பதற்கு இடங்களும் தயார் நிலையில் உள்ளது. மேலும்,தாழ்வானபகுதிகளில் தேவையானஅளவுமணல் மூட்டைகள் கையிருப்புஉள்ளது. அதேபோன்றுநீச்சல் பயிற்சிபெற்றமுன்களமீட்பாளர்களும் தயார்நிலையில் உள்ளனர்.
மாண்புமிகுதமிழகமுதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படிஅனைத்துவளர்ச்சித்திட்டப்பணிகளும் தொடர்ந்துகண்காணித்துசெயல்படுத்திடதொடர் நடவடிக்கையாகமேற்கொள்ளப்படும்.குறிப்பாகசாதாரணமக்களுக்குதேவையான இலவசவீட்டுமனைப்பட்டா,முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்டவைகள் குறித்தபயனாளிகளைதேர்வுசெய்துஉரியநடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனமாண்புமிகுசுற்றுச்சூழல் காலநிலைமாற்றத்துறைமற்றும் இளைஞர் நலன் விளையாட்டுமேம்பாட்டுத் துறைஅமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாககாவல்துறை,வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை,வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை,மின்சாரத்துறை,சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைகள்துறை உள்ளிட்டதுறைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் தொடர்பாகமாண்புமிகுஅமைச்சர் அவர்கள் விரிவாகஅலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மாற்றுத் திறனாளிநலத்துறைசார்பில் ரூ. 2,31,000 மதிப்பீட்டில் 11 மாற்றுத்திறனாளிகளுக்குஉதவித் தொகை,வருவாய்துறைசார்பில் இயற்கை இடர்பாடு இடி மின்னல் தாக்கிஉயிரிழந்தகுடும்பங்களுக்குதலா 4 இலட்சம் வீதம்,ரூபாய் 8 இலட்சத்திற்கானகாசோலையினையும்,சமூகபாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.86,000 மதிப்பீட்டில் 18 பயனாளிக்குபல்வேறுஉதவிதொகையினையும்,ஆதிதிராவிடர்நலத்துறைசார்பில் ரூ.2,98,080 மதிப்பீட்டில் 8 பயனாளிகளுக்குவீட்டுமனைபட்டாவையும்,மாவட்டபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைசார்பில் ரூ.24,350 மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்குவிலையில்லாதேய்ப்புபெட்டியையும்,ஊரகவளர்ச்சிமுகமைதுறையின் சார்பில் ரூ.22,16,000மதிப்பீட்டில் பிரதமமந்திரிவீடுவழங்கும் திட்டத்தின்கீழ் 8 பயனாளிகளுக்குஉதவியையும்,சமூகநலத்துறைசார்பில்ரூ.18,00,000 மதிப்பீட்டில்முதலமைச்சரின் இரண்டுபெண் குழந்தைபாதுகாப்புத் திட்டத்திற்கான 37 பயனாளிகளுக்குகாசோலையும்,மகளிர் திட்டத்தின் சார்பில் ரூ.16,40,000மதிப்பீட்டில் 10மகளிர் சுய உதவிகுழுக்களுக்குவங்கிகாசோலையும்,வேளாண்மைமற்றும் உழவர் நலத்துறைசார்பில் ரூ.3,82,500மதிப்பீட்டில்நலதிட்டஉதவிகளையும்,ஊரகபுத்தாக்கதிட்டத்தின் சார்பில் சுய உதவிகுழுக்களுக்கு 10 நபர்களுக்குரூ.2,50,000 வங்கிகடன் காசோலைபோன்றமொத்தம் ரூ.77,93,930 இலட்சமதிப்பீட்டில் 125 நபர்களுக்குநலத்திட்டஉதவிகளைமாண்புமிகுசுற்றுச்சூழல் அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள்மாவட்டகண்காணிப்புஆய்வுக் கூட்டத்தில் வழங்கினார்.
முன்னதாகநாகப்பட்டினம்; புதியகடற்கரையைமேம்படுத்துவதுதொடர்பாகநேரில் பார்வையிட்டுஆய்வுசெய்தபின் கடற்கரைக்கானநீலநிறச்சான்றுபெறும் வகையில் கடற்கரையைமேம்படுத்துவதற்காக 32 வகையானவளர்ச்சிதிட்டபணிகளுக்காகரூ.10 கோடிஒதுக்கீடுசெய்வதற்கானஅரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தொடர்ந்துநாகை30-ஆம் ஆண்டுவிழாவைமுன்னிட்டுநாகப்பட்டினம் அரசுமருத்துவமனைவளாகத்தில் அமைந்துள்ளபுனரமைப்புசெய்யப்பட்டமகாத்மாகாந்திமண்டபத்தை மாண்புமிகுசுற்றுச்சூழல் காலநிலைமாற்றத்துறைமற்றும் இளைஞர் நலன் விளையாட்டுமேம்பாட்டுத்துறைஅமைச்சர்; அவர்கள் திறந்துவைத்துமாலைஅணிவித்துமரியாதைசெலுத்தினார்.
தொடர்ந்துநாகப்பட்டினம் மாவட்டவருவாய் கோட்டாட்சியர் அலுவலகவளாகத்தில் ரூ. 20 இலட்சம் மதிப்பீட்டில் காளான் விதைஉற்பத்தி ஆய்வுக் கூடத்தினைமாண்புமிகுசுற்றுச்சூழல் காலநிலைமாற்றத்துறைமற்றும் இளைஞர் நலன் விளையாட்டுமேம்பாட்டுத்துறைஅமைச்சர்; அவர்கள் திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் திரு.கு.ஜவஹர் இ.கா.ப.,மாவட்டவருவாய் அலுவலர் திருமதி.வி.ஷகிலா,மாவட்டஊரகவளர்ச்சிமுகமைதிட்ட இயக்குநர் திரு.பெ.பெரியசாமி,துணைஒன்றியக்குழுஉறுப்பினர் மற்றும் அனைத்துதுறைஅரசுஅலுவலர்களும் கலந்துக் கொண்டனர்.

