வேதாரண்யம் வட்டத்தில் 5 நலவாழ்வு மைய கட்டிங்களை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார்
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் ரூ.1.25 கோடிமதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 நலவாழ்வு மைய கட்டிடங்களை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ், நாகை எம்.பி செல்வராசு, தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது
தமிழக முதலமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மக்களின் பிரச்சனைகளை தீர்த்து மக்களைத் தேடிஅனைத்தும் சேரவேண்டும் என்றநோக்கில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற உன்னத திட்டத்தினை உருவாக்கி அதன் மூலம் மருத்துவமனைக்கு செல்ல இயலாத பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து வேதாரண்யம் வட்டம் பெர்யகுத்தகை, தோப்புத்துறை, மணியந்தீவு, அகஸ்த்தியன்பள்ளி கிழக்கு மறைஞாயநல்லூர், கடினல்வயல் ஆகிய கிராமங்களில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புமருந்துதுறை சார்பில் தலா ரூ.25 இலட்சம் வீதம் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நலவாழ்வு மையகட்டிடங்களையும், ஆயக்காரன்புலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் கருப்பம்புலம் நடுக்காடு முழுநேர அங்காடியானது 1634 குடும்பஅட்டைகளுடன் செயல்பட்டு வந்த நிலையில் குடும்பஅட்டைதாரர்கள் நலனை கருத்தில் கொண்டு கருப்பம்புலம் அங்காடியிலிருந்து 684 குடும்ப அட்டையினை பிரித்து கருப்பம்புலம் தெற்கு காட்டில் ஒரு புதிய முழு நேர நியாயவிலைக் கடை கட்டிடத்தை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்துவைத்தார்.
முன்னதாக பெரியகுத்தகை கிராமத்தில் திறந்து வைக்கப்பட்ட நலவாழ்வு மையவளாகத்தில் மரக்கன்றினை நட்டுவைத்து, பொதுமக்களுக்கு நலவாழ்வு மையத்தில் அளிக்கப்படும் மருத்துவ பரிசோதனையை பார்வையிட்டார். மேலும், மணியன்தீவு கிராமத்தில் 11 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் விஜயகுமார், வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் துரைமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், வேதாரண்யம் வட்டாட்சியர் ரவிசந்திரன், ஊராட்சி மன்ற தலைவர், வேதாரண்யம் நகரச் செயலாளர் மா.மீ.புகழேந்தி, வழக்கறிஞர் பிரிவு மா.மீ.அன்பரசு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

