அக் 27
இல்லம் தேடி கல்வி – தலைமை ஆசிரியர்களிடம் 12 ஆயிரம் மாண வர்களுக்கு முகக் கவசம் வழங்கப்பட்டது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் நடைபெற்றது . இதில் அரசு மற்றும் அரசு உதவி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 125 பேர் கலந்து கொண்டனர் தலைமை ஆசிரியர்களிடம் பன்னிரண்டாயிரம் மாணவர்களுக்கான முகக் கவசத்தை வசந்தம் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் ஆசிரியை வசந்தா வழங்கினார் இதில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உதயகுமார் , வட்டார கல்வி அலுவலர்கள் சிவக்குமார் , தாமோதரன் பள்ளி துணை ஆய்வாளர்
ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

