
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா காளான் மற்றும் கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருட்களை துணிகரமாக சமூக விரோதிகள் விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கொடைக்கானல் மலைப்பகுதியில் பள்ளமான இடத்தில் கஞ்சா காளான் பயிரிட்டு அதனை பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வந்ததாகவும் கூறப்படுகிறது.
கொடைக்கானலில் சமிபத்தில் வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பல லட்சம் மதிப்புள்ள கஞ்சா செடிகளை தீயிட்டு அளித்தனர். வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் குறிப்பாக பள்ளத்தாக்குகளில் கஞ்சா காளான் பயிரிட்டு வருவதால் காவல்துறையினருக்கு வனத்துறை உதவி புரிந்தாள் கொடைக்கானலில் கஞ்சா பயிரிடுவதை அடியோடு ஒழிக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் கொடைக்கானல் பகுதியில் இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா விற்பனைதொடர்ந்து நடைபெற்று வருவதாக திண்டுக்கல் மாவட்ட எஸ்பி கொடைக்கானல் டிஎஸ்பி ஆகியோருக்கு புகார் வந்ததன்அதன் அடிப்படையில் டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் மற்றும் போலீசார் கஞ்சா கும்பலை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர் மேலும் கஞ்சாவை அடியோடு ஒழிக்க முடிவு செய்து வருகின்ற டிஎஸ்பி யின் இந்த நடவடிக்கை கொடைக்கானலில் உள்ள கஞ்சா வியாபாரிகளுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடைக்கானல் போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வுசெய்த எஸ்பி அவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி ஏரி சாலையில் அமைந்திருக்கும் கண்காணிப்பு கேமரா பிரிவை துவங்கி வைத்தார் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது மழை இடர்பாடுகளை விரைந்து சரி செய்ய தாண்டிக்குடி ஊத்து பகுதிகளில் பேரிடர் மீட்புக் குழு நிறுத்தப்பட உள்ளது கொடைக்கானலுக்கு எட்டு வழித்தடங்களில் தானியங்கி நம்பர் பிளேட் பதிவு செய்யும் இயந்திரம் பொருத்தப்படும் வார விடுமுறை தினங்களில் ஏற்படும் போக்குவரத்தை சரி செய்ய கூடுதல் போலீஸார் நியமிக்கபடவுள்ளனர் மேல் மலைப்பகுதிகளில் புதிய காவல் நிலையம் ஏற்படுத்தப்படும் மலைப்பகுதிகளில் குற்றங்களை தடுக்க 250 புதிய கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது
போதை காளான் விற்பனையில் ஈடுபட்ட 21பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் மீறுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என தெரிவித்தார்
திண்டுக்கல் மாவட்ட எஸ்பி அவர்கள் உத்தரவின் பெயரில் கொடைக்கானல் டிஎஸ்பி ஸ்ரீனிவாசன் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகளை ரகசியமாக கண்காணிக்க தனிப்படை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது
மேலும் கொடைக்கானல் பகுதியில் கஞ்சா காளான் போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்தால் யாராக இருந்தாலும் குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என
டிஎஸ்பி சீனிவாசன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார் செய்தி தொகுப்பு கொடைக்கானல் சிறப்பு செய்தியாளர்

