• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பெண் ஐ பி எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது

policeseithitv by policeseithitv
October 27, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பெண் ஐ பி எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பெண் ஐ பி எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க தடை கோரி , சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது

கடந்த பிப்ரவரி மாதம் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபியாக இருந்தவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 127 சாட்சிகளை விசாரித்து, 73 ஆவணங்கள் உள்ளிட்டவை அடங்கிய ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்

இந்நிலையில் குற்ற சம்பவம் பயணத்தின் போது நடந்துள்ளதாகக் கூறப்படுவதால், வழக்கை கள்ளக்குறிச்சி அல்லது செங்கல்பட்டு நீதிமன்றங்களில் தான் விசாரிக்க வேண்டும் எனவும், விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க அதிகாரமில்லை என சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

இந்த உத்தரவை ரத்து செய்து, வழக்கை செங்கல்பட்டு அல்லது கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனவும், அதுவரை விழுப்புரம் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சஸ்பெண்ட் ஆன சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்

இந்த வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன் ராஜேஷ்தாஸ் மனுவை தள்ளுபடி செய்ததோடு, விழுப்புரம் நீதிமன்றம் வழக்கு விசாரணையை மூன்று மாதத்தில் முடிக்க உத்தரவிட்டுள்ளார்

Previous Post

உத்திரபிரதேசம் லக்கிம்பூர் விவசாயிகள் போராட்டத்தில் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவசாயிகளின் அஸ்தி வேதாரண்யம் சன்னதி கடலில் கரைக்கப்பட்டது.

Next Post

பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினரின் வாரிசுதாரர்கள் 5 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை

Next Post
பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினரின் வாரிசுதாரர்கள் 5 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை

பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினரின் வாரிசுதாரர்கள் 5 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In