உத்திரபிரதேசம் லக்கிம்பூர் விவசாயிகள் போராட்டத்தில் கார் ஏற்றி கொல்லப்பட்ட
விவசாயிகளின் அஸ்தி வேதாரண்யம் சன்னதி கடலில் கரைக்கப்பட்டது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை கடந்த ஓராண்டாக செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக உத்திரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டம் செய்தனர். அப்போராட்டத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டனர். அப்போராட்டத்தில் இறந்த ஐந்து விவசாயிகளின் அஸ்திக்கு நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் விவசாயிகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பொது நல அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூ. கட்சி ஒன்றியச் செயலாளர் சிவகுருபாண்டியன் தலைமை வகித்தார். திமுக சார்பில் நாகை நகரச் செயலாளர் மா.மீ.புகழேந்தி, மா.மீ.அன்பரசு, இந்திய கம்யூ. கட்சி மாவட்டச் செயலாளர் சம்பந்தம், பொறுப்பாளர்கள் நாராயணன், பாபுஜி, மார்க். கம்யூ. முன்னாள் எம்.எல்.ஏ மாரிமுத்து, கோவை.சுப்பிரமணியன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன், பால்ராஜ், புலவர் கணேசன், வைரவன், ஐஎன்டியுசி பொறுப்பாளர்கள் தங்கமணி, சாம்பசிவம், விசிக செல்வராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், இலங்கிரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஐக்கிய விவசாய முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் பயணக்குழுவினருடன் அஸ்தி வேதாரண்யம் வந்தது டெல்டா மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு வந்த விவசாயிகளின் அஸ்தி வேதாரண்யத்தில் அஞ்சலி செலுத்திய பின் வேதாரணியம் சன்னதிக் கடலில் கரைக்கப்பட்டது
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

