தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினரின் வாரிசுதாரர்கள் 5 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான தகவல் பதிவு உதவியாளர் (Date Entry Assistant) பணியாணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.
♻️தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினரின் வாரிதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழக அரசிற்கு காவல்துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டது. அதன் மூலம் காவல்துறையில் பணியிலிருக்கும் போது உயிரிழந்த காவல்துறையினரின் வாரிசுதாரர்கள் 5 பேருக்கு தகவல் பதிவு உதவியாளர் (Date Entry Assistant) பதவிகளில் தமிழக அரசு பணி நியமனம் செய்துள்ளது. மேற்படி அரசு பணியாணையை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று (27.10.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கி பணி சிறக்க வாழ்த்தினார்.
♻️மேற்படி பணியாணையை தமிழக காவல்துறையில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. குமார் மகள் சூரியா, சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. மீனாட்சி சுந்தரம் மகன் சொரிமுத்து அய்யனார், சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. பெரியசாமி மகன் சுரேஷ் ராஜா, தலைமை காவலர் தெய்வத்திரு. சசிக்குமார் மகள் அட்சயா, காவலர் தெய்வத்திரு. நவமணி ரத்தினரோச் சகோதரர் ஜஸ்டின் செல்வமணி ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் பெற்றுக் கொண்டனர்.
♻️இந்நிகழ்வின் போது மாவட்ட காவல்துறை அலவலக நிர்வாக அலுவலர் திரு. சங்கரன், அலுவலக கண்காணிப்பாளர் திரு. நம்பிராஜன் மற்றும் உதவியாளர் திருமதி. கிருஷ்ணம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.


