வத்தலகுண்டுவில் நகைச்சுவை நடிகர் டைகர் தங்கதுரை பிறந்த நாள் விழா.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் விஜய் டிவி நகைச்சுவை நடிகர் டைகர் தங்கதுரை பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் மன்றத்தின் சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பிரஸ் மீடியா மாநில நிறுவனப் பொதுச் செயலாளர் ரபீக் அகமது கலந்துகொண்டார் . பின்னர் காளியம்மன் கோவில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு முககவசம் கபசுரக் குடிநீரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் சுகுமார், வத்தலக்குண்டு காவல் கண்காணிப்பாளர் குமரன் சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா, பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் லட்சுமி பிரியா மற்றும் காவலர்களுக்கு ரசிகர் மன்ற மாநில தலைவர் முத்துப்பாண்டி கபசுர குடிநீர் வழங்கினார். இவ்விழாவில் பிரஸ் மீடியா திண்டுக்கல் மாவட்ட தலைவர் ஏ.பி.சேகர், திண்டுக்கல் மாவட்ட ரசிகர் மன்ற தலைவர் அருண்ரூபன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலையரசன் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு: கொடைக்கானல் வி ஆனந்த்

