நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல 18- வது ஸ்தோத் திரப்பண்டிகை விழா, திருமண்டல உப-தலைவர் வி.எம்.எஸ். தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
தென்னிந்தியதிருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல 18-வது ஸ்தோத் திரப்பண்டிகை மற்றும் திருவிருந்து ஆராதனை நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நடந்தது. திருமண்டல உப தலைவர் தமிழ்செல்வன் தலைமை யில் நடைபெற்றது. லே செயலாளர் நகர் பிரின்ஸ் கிப்ட்சன் வேத பகுதி வாசித்தார். குருத்துவ செயலாளர் எம்.பி.இம்மானுவேல் வான்ஸ்றக் திருமண்டல ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.

இந்த ஆராதனையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருமண்டல முன்னாள் லே செயலர் டி.எஸ்.எப் துரைராஜ், ஆந்திரா மாநிலம் கரீம்நகர் திருமண்டல லே செயலர் சாமுவேல், வழக்கறிஞர் ஆர். ஸ்டேன்லி வேதமாணிக்கம் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். இந்த ஆராத னையில் நாசரேத் தூய யோவான் பேராலய பாடகர் குழுவினர் சிறப்பு பாடல்கள் பாடினார்கள்.
திருமண்டல உப தலைவர் அருட்செய்தி வழங்கினார். ஆராதனையில் திருமண்டல குருமார்கள்,சபை ஊழியர்கள், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், சபை மக்கள் என திரளானோர் பங்கேற்று சிறப்பித்தனர். இதனை தொடர்ந்து ஆலய வளாகத்தில் புதிய நிர்வாகிகள் வரவேற்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
திருமண்டல உபதலைவர் தமிழ்செல்வன் தலைமை வகித்து ஆரம்ப ஜெபம் செய்தார். திருமண்டல லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், குருத்துவ செயலாளர் எம்.பி. இம்மானுவேல் வான்ஸ்றக், பொருளா ளர் மோகன்ராஜ் அருமைநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாசரேத் தூய யோவான் பேராலய தலைமை குருவானவரும், சபைமன்றத் தலைவருமான ஆல்பர்ட் வேதபாடம் வாசித்தார். குருவானவர் டேவிட்ராஜ், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பில்லிகிரஹாம் உள்படபலர் வாழ்த்தி பேசினர். மேலும் வட்டக்கோவில் ஜான்சன், தூய பேட்ரிக் ஆலய இன்ஸ்டீன், டி.எஸ்.எப் பிரேம், சாயர்புரம் ராஜேஷ் உள்படபலர் கலந்து கொண்டனர்.நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நடந்த 18- வது ஸ்தோத் திரப்பண்டிகை விழாவிற்கு வருகை தந்த திருமண்டல உபதலைவர் தமிழ்செல்வன், திருமண்டல லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், குருத்துவ செயலாளர் எம்.பி. இம்மானுவேல் வான்ஸ்றக், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம் ஆகியோரை வரவேற்று கலக்கலான பேண்டுசெட் வாத்தியம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுக பட்டாசு வெடித்தும் மாலை அணிவித்து வரவேற்றனர். நாசரேத்தில் ஸ்தோத்திர பண்டிகை விழாக்கோலம் பூண்டது.
செய்தி தொகுப்பு: எம்.ஆத்திமுத்து


