விளாத்திகுளம் பகுதியில் இயங்கி வரும் ஆகாஷ் IAS அகாடமியில் குடிமையியல் பணிக்கான மாதிரி தேர்வில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்க்கு விளாத்திகுளம் உட்கோட்ட துணை காவல் கண்கணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் பரிசுகள் வழங்கி ஊக்கபடுத்தும் விதமாக அறிவுரை கூறினார்கள்.
விளாத்திகுளத்தில் செயல்பட்டு வருகின்ற ஆகாஷ் IAS அகாடமி பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவ, மாணவியர்க்கு இன்று நடைபெற்ற மாதிரி தேர்வில் சிறப்பாக தேர்வு எழுதியவர்களுக்கு துணை காவல் கண்கணிப்பாளர் அவர்கள் பரிசுகள் வழங்கினார்கள். மேலும் அனைவரும் அரசு தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றும், தேர்வில் வெற்றி பெற்று ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும், குற்ற செயல்களில் ஈடுபட கூடாது என்றும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது கவனமாகவும் தலை கவசம் அணிந்தும் செல்ல வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள், ஆகாஷ் அகாடமி முதல்வர் திருமதி. இந்திராணி அவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


