சிறப்பு கவனம் பெறும் குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடை மற்றும்
இனிப்புகள் வழங்கல்
வேதாரண்யம் அக் 26
வேதாரண்யம் எஸ் எஸ் அறக்கட்டள சார்பில் சிறப்பு கவனம் பெறும் குழந்தைகளுக்கு தீபாவளிப் புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கும் விழா நெய்விளக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
விழாவிற்கு எஸ் எஸ் அறக்கட்டள தலைவர் எஸ் எஸ் தென்னரசு தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா தர்மராஜ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சின்னச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் புயல் குமார் வரவேற்றார்.
விழாவில் 44 மாணவர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
தலைமையாசிரியர் செல்வராணி, ஆசிரியர் பயிற்றுநர் தமிழ்ச்செல்வன், அறக்கட்டளை செயலாளர் மல்லிகா தென்னரசு, உறுப்பினர் கவிதா அன்பரசு, இயன்முறை மருத்துவர் பூமதி ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறப்பாசிரியை ஆனந்தவல்லி நன்றி கூறினார்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

