
தமிழகத்தில் இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் முதலமைச்சருக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை
தூத்துக்குடி தமிழகத்தில் இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் தமிழக முதலமைச்சருக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் இசக்கிராஜா அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் மக்கள் பாதிக்கப்பட்டு பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகி;ன்றனர். அவரச தேவைகளை தொடர்வதற்கு முடியாமல் பலர் பாதிக்கப்படுகின்றனர். இ பாஸ் முறையால் பல்வேறு இடங்களில் முறைகேடுகள் நடைபெறுகிறது. வாடகை கார் ஓட்டுநர்கள் வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது. மக்களின் வாழ்வாதரத்தை கவனத்தில் கொண்டு இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். அதுபோல் ஆலயங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் அதை சார்ந்த தொழில் செய்து வந்த பல்வேறு ஏழை மக்கள் மிகவும் பாதிப்பிற்குள்ளாகிறார்கள். அதனால் கோவில்களை திறந்து டோக்கன் முறையில் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

