
தமிழகத்தில் கொரானா வைரஸ் தாக்குதலின் விளைவு தமிழக மக்கள் இந்த நோயினாலும் மரணத்தினால் கணக்கிலடங்காதபடி கணக்கில் வராத படி எண்ணற்ற சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது மிகப்பெரிய வேதனையும் துயரமும் அடைந்துவிட்டது ஊரடங்கு மூலமாக வேலையின்மை வருமானமின்மை தலைவிரித்தாடுகிறது. ஏழை நடுத்தர மக்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு பஞ்சத்தினால் பசியினால் அழுது கொண்டிருக்கிறார்கள். இதை தமிழக அரசாங்கம் மத்திய அரசாங்கம் கண்டுகொள்ளாத படி உதவி செய்யாதபடி தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் மரணத்தின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது இதற்கு தமிழக அரசாங்கம் என்ன பாதுகாப்பை கொடுக்கிறது. ஒரு குடும்பத்தின் தலைவன் குடும்பத்தை பாதுகாக்க தன் உயிரையும் பொருட்படுத்தாது செயல்படுவான் அதேபோலதான் ஒரு நாட்டின் தலைவரும் தமிழகத்தில் முதல்வர் பதவி என்பது தமிழக மக்களின் நலன் காக்கவும் அவர்களைப் பாதுகாக்கவும் வாழ்வாதார தேவைகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் உங்களை முதல்வராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் ஆனால் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் தமிழக முதல்வர் தன் ஆட்சி முடிவதற்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மற்ற தொழில் துறைகளுக்கும் அடிக்கல் நாட்டு வகை மட்டும் முக்கிய கடமையாக கருதி கொண்டிருக்கிறார் விளம்பரத்தை மட்டுமே விரும்பி கொண்டிருக்கிறார்கள் வரும் தேர்தலில் மக்கள் உங்களை எப்படி தேர்ந்தெடுப்பார்கள் தமிழ் மக்கள் அனைவரும் இருதயத்தில் வெறுப்போடு இருக்கிறார்கள். இந்த ஊர் அடங்கு மூலமாக வறுமையின் காரணமாக வழிப்பறிகொள்ளைகளும் பூட்டிய வீட்டை கொள்ளை அடிப்பதும் எண்ணற்ற ஊர்களில் சகஜமாக நடந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் வீட்டு வாடகை செலுத்த முடியாதபடி கடன் தொகை செலுத்த முடியாத படியும் பொருளாதாரத் தேவைகளை சந்திக்க முடியாதபடி வெளியில் தெரிந்தால் அவமானம் என்று குடும்பத்தில் உள்ளவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் . இன்னொரு பக்கம் ஆன்லைன் வகுப்புகள் என்று சொல்லி தனியார் பள்ளிகள் கட்டணத்தை கட்ட வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வேதனை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். மின்சாரக் கட்டண உயர்வு அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியாத சூழ்நிலை எண்ணற்ற குடும்பங்கள் இரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாவற்றையும் சீரமைத்து கொடுக்கக்கூடிய இந்த மக்களின் பொருளாதார தேவைகளையும் வாழ்வாதார தேவைகளையும் சரி செய்து கொடுக்கக்கூடிய பாதுகாக்கக்கூடிய அவர்கள் நலம் காக்க கூடிய முக்கிய பொறுப்பில் தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இருக்கிறார்கள் அவரை சுற்றி இருக்கிற பொறுப்பில் இருக்கக்கூடிய மந்திரிமார்கள் இதற்கு உரியவர்களாக இருக்கிறார்கள் ஆனால் மக்கள் நலனை நீங்கள் பார்க்கிறீர்களா மக்கள் தேவைகள் உங்களுக்கு தெரியுமா. ரேஷன் கடையில் கடந்த மாதம் ஒரு கோவில் பூஜை செய்யக் கூடிய குருக்கள் ஒருவர் ரேஷன் பொருள் வந்து கேட்கிறார் கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை பணத்தை கொடுத்து வாங்கினார்கள் அந்த குழுக்களிடம் பணம் இல்லை என்றவுடன் பொருளில்லை என்று அனுப்பி விட்டார்கள் அவர் வேதனையோடு புலம்பிக்கொண்டு போகிறார் எவ்வளவு வேதனையான விஷயம் ஐந்தாம் தேதிக்கு மேல் பொருட்கள் இலவசம் என்று சொல்கிறீர்கள் பணம் கொடுத்து வாங்கியவர்கள் ஏமாளிகளாக நிற்கிறார்கள் இப்படிப்பட்ட நெருக்கடியான வருமானம் இல்லாத சூழ்நிலையில் வேஷம் கட்டி வாங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கும் இவர்களே உங்கள் இதயத்தில் ஈரம் என்பதில் துளியளவும் இல்லையோ பிள்ளை மக்களுடைய வாழ்வில் நீங்கள் சிந்தித்து பார்க்கிறீர்களா ஒரு நாள் அந்த அடித்தட்டு மக்களோடு வாழ்ந்து பாருங்கள் அப்பொழுது அவருடைய வாழ்வாதார தேவைகளும் வேதனைகளும் உங்களுக்கு புரியும் ராஜபோக வாழ்க்கை யும் சுற்றி பணிவிடை செய்யக் கூட அது அரசாங்க ஊழியர்களும் உங்களுக்கு இருக்கும் போது உங்களுக்கு எப்படி என்ற வறுமையின் கொடுமை தெரியும். இன்னொரு பக்கம் இ.பாஸ் என்ற பெயரில் நடக்கின்ற கொள்ளைச் சம்பவங்கள் வேதனை கூடியதாக இருக்கிறது உறவுகளின் மரணத்திற்கும் திருமணத்திற்கு மருத்துவ தேவைகளின் அவசரத்திற்கு வெளியில் செல்ல முடியவில்லை இ.பாஸ் முக்கியம் என்று சொல்கிறீர்கள். ஆனால் அதே இ. பாஸ் ட்ராவல்ஸ் ஏஜெண்டுகளுக்கு உடனடியாக கிடைத்துவிடுகிறது.பணம் வெளியூர் செல்ல வேண்டும் அவசரம் என்றால் டிராவல்ஸ் இடம் சொன்னால் நீங்கள் செல்லக்கூடிய காருக்கும் இரண்டு மடங்கு தொகை வசூலித்து இப்ப தயார் பண்ணி தருகிறார்கள் அவர்களுக்கு எப்படி எளிதாக கிடைக்கிறது சாமானிய மக்களுக்கு கிடைக்காத அந்த இ.பாஸ் ஏஜெண்டுகளுக்கு எளிதாக கிடைத்து விடுகிறது இது ஒரு வேதனைக்குரிய விஷயம் இந்த வேளையிலும் இந்த நெருக்கடி வறுமையிலும் வேதனையிலும் வியாபாரம் எப்படி சென்று கொண்டிருக்கிறது பாருங்கள். இதை ஏன் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை ஏன் மக்களுடைய நலத்தில் இவ்வளவு பாராபட்சம் பார்க்கிறீர்கள் காட்டுகிறீர்கள்.நோய் தோற்று என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு தெருக்களிலும் மாநகராட்சி அடைத்து விடுகிறார்கள் யாரும் வெளியே வரவும் கூடாது உள்ளே செல்லவும் கூடாது தினக்கூலி தினமான பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் எப்படி வேலைக்கு செல்ல முடியும் எப்படி அவர்கள் வாழ்வாதாரத்தை சரிசெய்ய முடியும்.தமிழக அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும் தமிழக முதல்வர் தயவுகூர்ந்து எண்ணிப்பார்க்க வேண்டும். நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு திட்டங்கள் செயல்பாடுகள் ஊடகத்திலும் பத்திரிகைகளிலும் விளம்பரமாக வெளிவரலாம் ஆனால் இந்த மக்களுடைய கொந்தளிப்பும் வேதனையும் உங்கள் கண்களுக்குத் தெரிகிறதா இல்லை. தமிழக அரசு தயவுகூர்ந்து மக்கள் வாழ்வில் ஒரு பாதுகாப்பு சூழ்நிலையை உருவாக்க வேண்டும் வாழ்வாதாரத்தில் வறுமையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரானோ தொற்று பாதிப்பு என்று கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஒருவரை அழைத்து செல்கிறார்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு திங்கள்கிழமை மாலை வீட்டிலிருந்து கொள்ளுங்கள் என்று அனுப்பிவிடுகிறார்கள். ஏன் முதலில் அவரைவீட்டில் தனிமைப்படுத்தி இருக்கலாமே மருத்துவமனைக்கு வந்து அவரை பதிவு செய்தபின் அனுப்பி விடுகிறீர்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் மரணத்திற்கு நீங்கள் என்ன கணக்கு சொல்ல போகிறீர்கள் அந்த மக்களுக்கு என்ன ஒரு ஆறுதலான காரியத்தை செய்யப் போகிறீர்கள் மனவேதனையோடு கண்ணீரோடு உங்களைப் பார்த்து கேட்கிறேன் தயவு கூர்ந்து தமிழகத்தின் முதல்வராக இருக்கிறேன் மாண்புமிகு ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நடவடிக்கை எடுக்காத மக்கள் உங்களை நம்பி இருக்கிறார்கள் இந்த ஊரடங்கால் எவ்வளவு வேதனைகள் எவ்வளவு நெருக்கடிகள் தயவுகூர்ந்து தமிழக மக்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இ. பாஸ் முறையை தளர்த்தி விடுங்கள்..இந்த மக்களின் வாழ்வாதாரத்தை வழி செய்யுங்கள் மீண்டும் வருகின்ற தேர்தலில் நாங்கள் நிற்க மாட்டோம் எங்களுக்கு தேவையில்லை என்ற ஒரு உறுதிப்பாடு உங்கள் இருதயத்தில் இருந்தால் தமிழக மக்களையும் தமிழகத்தை நிச்சயமாக காப்பாற்ற முடியாது ஆட்சிபீடத்தில் இருக்கிறீர்கள் அதிகாரம் உங்கள் கையில் இருக்கிறது நீங்கள் தயவு கூர்ந்து இந்த மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படுங்கள் அப்பொழுதுதான் வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் உங்களை மக்கள் திரும்பிப் பார்க்க முடியும் இல்லை என்றால் ஒரு வேதனையான நிகழ்வு தான் நிகழும் என்பதை கூறிக்கொள்கிறேன்.ஆட்சி பீடத்தில் இருக்கிற யார் என்ன தவறு செய்தாலும் காலாகாலத்திற்கும் இந்த நிகழ்வு இந்த வேதனை தமிழகத்தின் சரித்திரத்தில் உங்கள் பெயர் மறந்து போகாது உங்களைத்தான் இருதயத்தில் போற்றப்பட வேண்டிய உங்களைத்தான் இருதயத்தில் தூற்றிக் கொண்டிருப்பார்கள் தயவுசெய்து ஈரமுள்ள இதயத்தோடு நடவடிக்கை எடுங்கள் உங்களைச் சுற்றி ஆலோசனை சொல்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று மக்களுக்கு தெரியாது உங்களை தோல்வி கூட அவர்கள் வழிவகை செய்து கொண்டிருக்கலாம் சிந்தித்துப்பாருங்கள் மக்கள் நலனை காப்பாற்றுங்கள். இந்த வேதனையான துயரமான இந்த சூழ்நிலைக்கு கண்ணீரோடு கண்டனத்தை மக்கள் உரிமைகள். பாதுகாப்பு கழகம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்… தலைவர் டாக்டர் பாலசுப்ரமணியன் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம்..

