
கொடைக்கானல் நகரில் பிரசித்தி பெற்ற புனித சலேத் அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் பெருவிழா கொடியேற்றத்துடன் நடைபெறுவது வழக்கம். இந்த திருக்கொடி மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து புனித சலேத் அன்னை ஆலயம் அடையும் பின்னர் அங்கு சிறப்பு திருப்பலி நடைபெற்ற பின்னர், கம்பத்தில் திருக்கொடி ஏற்றப்படுவது வழக்கம் .இந்த வருடம் 154வது திருவிழாவாக நடைபெற இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு உள்ள நிலையில் கோவில்களில் திருவிழா நடத்த தற்போது மத்திய மாநில அரசுகள் தடை விதித்துள்ளது இதனால் உலகப் புகழ்பெற்ற சலேத் அன்னை ஆலய திருவிழா இந்த ஆண்டு நடக்காது என்று வரும் 14 15 ஆகிய தினங்களில் பங்குத்தந்தை மட்டும் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்து
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகப் புகழ்பெற்ற புனித சலேத் அன்னை ஆலயம் உள்ளது உலகத்திலேயே இரண்டு இடங்களில் மட்டும் அமைந்துள்ளது இந்த ஆலயம் ஒன்று பிரான்சிஸ் நாட்டிலும் மற்றொன்று கொடைக்கானலில் மட்டுமே அமைந்துள்ளது இதன் தனி சிறப்பு இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் வெகு விமர்சியாக திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இரவு தேர் பவனி எப்போது வெளிநாடுகளிலிருந்து வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வது இந்த திருவிழாவில் முக்கிய சிறப்பு ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக
உலகப் புகழ்பெற்ற சலேத் அன்னை ஆலய திருவிழா நடக்காது என்றும் வரும் 14, 15 ஆகிய தினங்களில் பங்குத்தந்தை மட்டும் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்து.
செய்தி தொகுப்பு
காலை தீபம் கோடை
ஐ எஸ் மோகன்

