மதுரை மாவட்டத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் பொருட்டும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சார்பாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் உட்கோட்டம் கீழவளவு சரகத்திற்கு உட்பட்ட சாத்தமங்கலம் கிராமத்தில் அக்கிராம வெளிநாடு வாழ் இளைஞர்கள் சார்பில் 20 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது. சாத்தமங்கலம் கிராமத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன் இன்று திறந்து வைத்தார்கள்.

