• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ்

policeseithitv by policeseithitv
October 23, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழக பத்திரிகையாளர் அனைவருக்கும் ரூ. 5 ஆயிரம் -தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம், சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தீபாவளி திருநாளை முன்னிட்டு அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இவர்களின் உழைப்பால்தான் நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில், இந்த ஆண்டு தீபாவளித் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு 2020-2021 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கிட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கோவிட்-19 தொற்றுநோயின் முதல் அலை காரணமாக மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைந்து இருந்த நிலையில், கோவிட்-19 இரண்டாவது அலையின் காரணமாக, பொருளாதார விளைவுகள் அரசின் நிதிநிலையை மேலும் பாதித்துள்ளது. குறிப்பாக, அதிகமான எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணிபுரியும் அரசு நிறுவனங்களான தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் மற்றும் பல நிறுவனங்கள் இதனால் பாதிக்கபட்டுள்ளன. இதன் காரணமாக, ஏறத்தாழ அனைத்து வணிக நடவடிக்கைள், குறிப்பாக, பொதுத்துறை நிறுவனங்களின் வணிகம் மற்றும் செயல்பாடுகள், பாதிக்கப்பட்டுள்ளபோதிலும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து முழு மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன்படி, போனஸ் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000/- என உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பும் ரூ.7,000/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 2020-2021 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை கீழ்க்கண்டவாறு வழங்கப்படும்.
இலாபம் ஈட்டியுள்ள / நட்டம் அடைந்துள்ள அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக ரூ.8,400/- பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 இலட்சத்து 87 ஆயிரத்து 250 தொழிலாளர்களுக்கு 216 கோடியே 38 இலட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Previous Post

ஹிந்து அறநிலையத்துறை மூலம் நடத்தப்படும் கல்லூரிகளில் ஹிந்துக்கள் மட்டுமே நியமிக்க முடியும்- தமிழக அரசு

Next Post

விருதுநகர் காரியாபட்டி காவல் நிலையத்தின் சார்பில் அனைத்து பள்ளிகள் தோறும் மாணவ, மாணவியற்களுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

Next Post
விருதுநகர் காரியாபட்டி காவல் நிலையத்தின் சார்பில் அனைத்து பள்ளிகள் தோறும் மாணவ, மாணவியற்களுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

விருதுநகர் காரியாபட்டி காவல் நிலையத்தின் சார்பில் அனைத்து பள்ளிகள் தோறும் மாணவ, மாணவியற்களுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In