தூத்துக்குடி நாசரேத் திருமண்டல “லே” செயலர் கிப்சன் மற்றும் திருமண்டல நிர்வாகஸ்தர்கள், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் கடந்த 20-10-2021 அன்று இறுதி கட்ட தேர்தல் நடைபெற்றது.
இதில் “லே” செயலராக கிப்சன், திருமண்டல உப தலைவராக குருவானவர் தமிழ்ச்செல்வன், குருத்துவ காரியதரிசியாக இம்மானுவேல் வான்ஸ்டக், பொருளாளராக மோகன்ராஜ் அருமைநாயகம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களையும், மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்களையும், மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சிறப்பான நிர்வாகம் அமைந்திட கனிமொழி எம்.பி அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.

