விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது.
♻️தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் போலீசார் ஆங்காங்கே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
♻️ போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி விளாத்திகுளம் எட்டயபுரம் ரோட்டில் உள்ள செல்வம் (49) என்பவருக்கு சொந்தமான AMS மளிகை கடையை சோதனை செய்த போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அவர் வைத்திருந்த பைகளில் ரூபாய் 18,000/- மதிக்கத்தக்க புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தும்,அதனை குழந்தைகளுக்கு விற்பனை செய்த அதே ஊரைச் சேர்ந்த நடராஜன் மகன் சூரிய நாராயண ராஜா (42), மற்றும் ராஜகுரு மகன் கணேசன் (47) ஆகிய 3 எதிரியையும் கைது செய்தனர்.


