தூத்துக்குடியில் திமுக பொறியாளர் அணி சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி திமுக பொறியாளர் அணி சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு மாவட்ட பொறியாளர் அணி சார்பில் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை யொட்டி தெர்மல்நகர் கேம்ப் 1 நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமை வகித்து தூய்மை பணியாளர்கள் துறைமுக மருத்துவமணையில் பணியாற்றும் செவிலியர்கள் தெர்மல் நகர் துறைமுகம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கௌரவித்து கிரிமிநாசினி முககவசம், கையுறை, கபசுரகுடிநீர் ஆகியவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் சின்னத்துரை, ஆபிரகாம், தீபக், உலகநாதன், ரூபன், ஜாபர், வட்டசெயலாளர்கள் ஸ்டாலின், முத்துராஜ், நிர்வாகிகள் ராபின், நம்பி, அனல்சக்தி, ஜார்ஜ்புஷ், முருகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

