கொரோனா இல்லாத தூத்துக்குடி என்ற அமைப்பு சார்பில் இன்று 5000 பேருக்கு கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வை தூத்துக்குடி நகர்புற சுகாதாரஅலுவலர் DR.அருண்குமார் தொடங்கிவைத்தார். 
தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 8;
கொரோனா இல்லாத தூத்துக்குடி என்ற அமைப்பு சார்பில் இன்று கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வை தூத்துக்குடி நகர்புற சுகாதாரஅலுவலர் DR.அருண்குமார் தொடங்கிவைத்தார்.
கொரோனா எதிரொலியால் ஏழை முதல் பணம் படைத்தவன் முதல் அஞ்சி நடுங்குகிறது..சிறு குழந்தையெனினும் தூக்கி சென்று பல நாட்கள் தாய் தந்தையினரை பிரிந்து கிடக்கும் பரிதாபம்….
வாழும் போதும் நிம்மதி இல்லாமல் இறந்தும் யாரும் அருகே வரமுடியாமல் கொடுமையான கால கட்டத்திலிருந்து விடுபடுவதற்க்காக கொரோனா இல்லாத தூத்துக்குடி என்ற அமைப்பின் சிறு முயற்சி.
கொரோனா இல்லாத தூத்துக்குடி என்ற அமைப்பு சார்பில் தூத்துக்குடி மாவட்ட முழுவதும் கபசுரக்குடிநீர் வழங்கும் ஓவ்வொரு பகுதிகளிலும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்வு இன்று தூத்துக்குடி 2-ம் கேட் அருகே உள்ள சாரங்கபாணி தெருவில் வைத்து நடைபெற்றது தூத்துக்குடி நகர்புற சுகாதாரஅலுவலர் DR.அருண்குமார் தொடங்கிவைத்தார்.மாநகராட்சி உதவி ஆணையாளர் சரவணன்,சுகாதார அலுவலர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வீடு வீடாக சென்று 3 நாட்கள் தொடர்ச்சியாக நம்பகதன்மையுடைய மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட ,80 வருட பாரம்பரியமான கபசுர குடிநீரை..அரசின் வழிகாட்டுதலின் படி அவர்களோடு இணைந்து கொரோனா இல்லாத தூத்துக்குடியாக மாற்றுவதற்க்காக முதல் படியில் கால் வைத்துள்ளனர்.இன்று சுமார் 5000 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
மாநகரத்தில் சுமார் 7லட்சம் மக்கள் தொகை,மாவட்டத்தில் 13 லட்சம் மக்கள் தொகை எனும் தோராய எண்ணிக்கையுள்ள மக்களுக்கு 3 நாட்கள் வீதம் கொடுக்க அதிகபட்சம் 25 நாட்கள் இலக்கு வைத்துள்ளோம்…
ஒவ்வொரு தெருவிலும் உள்ள மக்களே கொடுக்க முன் வந்தால் பாதுகாப்பாக இருக்கும்..அவர்களின் வீட்டு பாத்திரங்களிலே கொடுக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கொரோனா இல்லாத தூத்துக்குடி என்ற அமைப்பு நிர்வாகிகள் பொன்.முருகன், சமூக ஆர்வலரும் பத்திரிகையாளருமான செ.ஜெகஜீவன் ,முகாம் ஏற்பாட்டாளர்கள் ராஜா,மணிமாறன்,பிரபு,ராம்குமார்,முரளி சங்கர், அவினாஷ், அரவிந்த்,கண்ணன்,சிவா,முகேஷ்,மனோஜ்,கேசவன்,மனோ,சிவா,ஸ்ரீகுமாரன் மற்றும் தன்னார்வலர்கள் பலர் முன்னின்று செய்தனர்.

