நாகப்பட்டினம் மாவட்டம் தோறுவித்து 30 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் நாகை 30 விழா வருடம் முழுவதும் கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை 30 தொடக்க நிகழ்ச்சியாக கடந்த மாதம் மாணவர்களுக்கிடையே கட்டுரைப்பேட்டிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கிடையே கோலப்போட்டிகள், பொதுமக்களுக்கு சுவரொட்டிகள் மற்றும் ஸ்லோகன் போட்டிகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன.
வருகின்ற 18.10.2021 முதல் 22.10.2021 வரை மாரத்தான் போட்டி மியாவாக்கி முறையிலான அடர்வனக் காடுகள் உருவாக்குதல், ஊட்டச்சத்து தோட்டம், அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், நாகையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சி, கலை மற்றும் பண்பாட்டுத்துறையின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பட்டிமன்றம் நடைபெற உள்ளன. கோவிட் பரவலை கட்டுப்படுத்திட யுடியூப், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் சமுக வளைதளத்தில் டிஸ்ட்ரிக் கலெக்டர், நாகப்பட்டினம் என்ற இணைய தள முகவரியில் கண்டு களித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
18.10.2021 முதல் 22.10.2021 வரை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் பொருட்கள் கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்கும் விற்பனைக்கும் மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

