நாகை மாவட்டத்தில் தமிழக அரசின் கட்டணமில்லா பேருந்தில் சுமார் ஏழரை லட்சம் பேர் பயணம் – ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தகவல்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை 7 இலட்சத்து 44 ஆயிரத்து 956 மகளிர்கள் ரூ. 90 இலட்சத்து 14 ஆயிரத்து 327 மதிப்பில் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணம் செய்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழக முதல்வர் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் தமிழக முதல்வர் பொறுப்பேற்ற உடன் தமிழ்நாடு தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் அனைத்து மகளிர்க்கும் கட்டணம் இல்லாமல் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க ஆணை பிறப்பித்தார்கள்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் “திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நகரப்பேருந்துகளில் பயணிக்க கட்டணமில்லா பேருந்து சீட்டு அச்சிடப்பட்டு, ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து நகரப்பேருந்துகளில் பயணம் செய்யும் அனைத்து மகளிர் மற்றும் பெண்களுக்கு இலவச பயண சீட்டு; வழங்கப்பட்டு வருகிறது.”
அதன்படி நாகை மாவட்டத்தில் போக்குவரத்துக்கழக மண்டலம் வேதாரண்யம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இரண்டு பணிமனையில் இருந்து தினமும் 20 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
நாகை மாவட்டத்தில் இதுவரை 7 இலட்சத்து 44 ஆயிரத்து 956 மகளிர் ரூ. 90 இலட்சத்து 14 ஆயிரத்து 327 மதிப்பில் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணம் செய்துள்ளனர் ஒரு நாளைக்கு சுமார் 8000 பயணிகள் கட்டணம் இல்லாமல் இலவச நகரப்பேருந்துகளில் பயணிக்கின்றனர். மாற்று திறனாளிகள் இதுவரை 2500 பேர் பயணித்துள்ளனர் திருநங்கைகள் 750 பேர் பயணித்துள்ளனர். இந்த சிறப்பு மிக்க இலவச பேருந்து பயணத்திட்டத்தை நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

