திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவரும் காவல் அலுவலர்களின் உடல் நலன் கருதி திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலர்களுக்கு Nestle Milo என்ற Energy Powder வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் பல்வேறு அரசு துறையினருடன் சேர்ந்து கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையிலும் மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றிவரும் காவல் அலுவலர்களின் உடல் நலனை கருத்தில்கொண்டு Nestle Milo நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலர் அனைவருக்கும் Nestle Milo நிறுவனத்தின் Active Go Energy Powder-யை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் இன்று காவலர்களின் உடல் நலனுக்காக வழங்கினார்கள். இந்நிகழ்வில் Nestle நிறுவன மேலாளர் திரு.லோகேஷ் மற்றும் திரு.ஜெகன் கலந்துகொண்டார்கள் .
செய்தி தொகுப்பு
நெல்லையிலிருந்து
தலைமை நிருபர் கொம்பன் ராஜ்

