தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் மன்றத்தில் நடைபெற்ற சரஸ்வதி பூஜை விழாவில் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், மற்றும் ஒளிப்பதிவாளர்கள் உள்பட பலர் தங்களது தொழிலுக்கு தேவையான பொருட்களை வைத்து எல்லோருக்கும் எல்லா செல்வங்களும் கிடைக்கப் பெற்று நலமுடன் வாழ வேண்டும் என வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் மன்ற கவுரவ ஆலோசகரும் மூத்த செய்தியாளருமான அருண் மற்றும் மன்ற தலைவர் சண்முகசுந்தரம்,செயலாளர் இசக்கிராஜா, இணைச்செயலாளர் சிதம்பரம், மன்ற செயற்குழு உறுப்பினர்கள் பாஞ்சை கோபால்சாமி, காதர், இருதயராஜ், மற்றும் மன்ற உறுப்பினர்கள் ரவி, பேச்சிமுத்து, சாதிக்கான், பாலகுமார், மாரிராஜா, கருப்பசாமி, கார்த்திகேயன், சூர்யா, முஹம்மது செய்யதலி, நீதிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


