தேசபிதா மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும் கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டும் தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தூத்துக்குடி பழைய முனிசிபல் ஆபிஸில் அமைந்துள்ள மகாத்மா காந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் சிலைகளுக்கு மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ்டேவிட் மாநில கலை இலக்கிய அணிச் செயலாளர் வழக்கறிஞர் அந்தோணிபிச்சை ஆகியோர் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் மாவட்ட பொருளாளர் அருண் சுரேஷ்குமார் மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ் பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ் மாவட்ட பிரதிநிதிகள் வின்சென்ட், பழனிவேல், பெரியசாமி தொண்டரணி செயலாளர் முத்துச்செல்வம் தொழிலாளர் அணிச்செயலாளர் சதாசிவம் வர்த்தகர் அணி செயலாளர் சிவசு முத்துக்குமார் விவசாய அணி செயலாளர் சரவணன் மாநகரச் செயலாளர் உதயசூரியன் மாநகர அவைத் தலைவர் மதியழகன் மாநகர துணை செயலாளர் மணிகண்டன் மாநகர மகளிர் அணி செயலாளர் மாலா உள்பட பலர் கலந்துகொண்டு மலர் தூவி வாழ்த்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

