தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் காவல் உதவி ஆய்வாளர் முத்து மாலை, முத்தையாபுரம் காவல் நிலைய பகுதியில் நடக்கும் சமூக விரோத செயல்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார். அவரது அதிரடி நடவடிக்கையால் சமூக விரோதிகள் கலக்கத்தில் உறைந்து போயுள்ளனராம்.
முத்தையாபுரம், முள்ளக்காடு பகுதிகளில் பிளாக்கில் மதுபானம், கஞ்சா வியாபாரம், வழிப்பறி போன்ற சமூக விரோத செயல்கள் தலைவிரித்து ஆடியது. இதற்க்கு முடிவு கட்டும் வகையில் ஒரு அதிரடி உதவி ஆய்வாளர் தேவை என்பதை அறிந்து சில மாதங்களுக்கு முன்பு தான், மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக முத்துமாலையை நியமித்தார். இவர் பொறுப்பேற்ற மறுநிமிடமே அதிரடி நடவடிக்கையை எடுக்க துவங்கினர்.
சப் இன்ஸ்பெக்டர் முத்து மாலை தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டும், ரௌடிகள் பட்டியலை கையில் எடுத்து அவர்களது செயல்பாடுகளை தீவிரமாகவும் ரகசியமாகவும் கண்காணிக்க துவங்கினார். இதனால், முத்தையாபுரம் பகுதியில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட கும்பல்கள் இவரது அதிரடிக்கு பயந்து இடமாற துவங்கிவிட்டனர்.
திருச்செந்தூர், ஆறுமுகநேரி, குலசை, அம்மன்புரம் போன்ற மிகவும் சென்சிடிவான பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையில் வாகன தணிக்கை செய்து உரிய கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி மகன் செல்வகுமார் (25) என்பவர் 11.10.2021 அன்று தனது இரு சக்கர வாகனத்தை முத்தையாபுரத்தில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸ் பகுதியில் நிறுத்தி வைத்துள்ளார். பின்னர் திரும்ப வந்து பார்க்கும் பொழுது அந்த இரு சக்கர வாகனம் திருடுபோனது தெரியவந்தது. செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் எப்போதும்வென்றான் காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்த பெருமாள் மகன் முருகன் (27) என்பவர் திருடியது தெரியவந்தது.
முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து மாலை வழக்கு பதிவு செய்து மேற்படி எதிரி முருகனை கைது செய்து, திருடப்பட்ட ரூபாய் 52,000/- மதிப்பிலான இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்தார்.

முத்தையாபுரம் காவல் உதவி ஆய்வாளராக முத்து மாலை பொறுப்பேற்ற பின்னர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக 4 வருடங்களுக்கு பிறகு காணாமல் போன பெண்ணை கண்டுபிடித்த முத்தையாபுரம் உதவி ஆய்வாளர் முத்துமாலையை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் வெகுவாக பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்தையாபுரம் உதவி ஆய்வாளர் முத்து மாலை போன்று ஒவ்வொரு காவல் நிலைய ஆய்வாளர்களும் அதிரடியாக பணியாற்ற துவங்கிவிட்டால் தூத்துக்குடி மாவட்டம் குற்றமில்லாத மாவட்டமாக மாறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
செய்தி தொகுப்பு: சக்திவேல்

