நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.10.2021) தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.10.2021) தொடங்கி வைத்தார்.
மாவட்;ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மக்களைத்தேடி அனைத்துப் பணிகளும் செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மக்களைத்தேடி மருத்துவம், வருமுன் காப்போம் அதனைத் தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து நெல்லை நேரடியாக கொள்முதல் செய்ய நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் போன்ற பல திட்டங்கள் மக்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது.
கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்; மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் சேலம் மாவட்டத்தில் 29.09.2021 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் நம்; மாவட்டத்தில் உள்ள 6 வட்டாரங்களில் தலா 3 சிறப்பு மருத்துவ முகாம்கள் இத்திட்டத்தில் நடத்தப்படவுள்ளது.
வரும்முன்காப்போம் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாமின் நோக்கம் சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனைகள் மேற்கொண்டு நோயினை கண்டறிந்து தேவைபடுபவர்களுக்கு உயர்சிகிச்சை அளித்திடவும், பல்வேறு நோய்களும் வரும்முன் தடுக்கும் அணுகுமுறையை மக்களிடம் பரப்புவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இச்சிறப்பு மருத்துவ முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை நலம், மகப்பேறு மருத்துவம், இரத்தம்(எச்.பி), இரத்த அழுத்த பரிசோதனை, இரத்தத்தில் சர்க்கரை அளவு, மலேரியா இரத்ததடவல், இதயதுடிப்பு அளவிடு, இதய மின்துடிப்பு பதிவு, கர்ப்பபை வாய் புற்று நோய் கண்டறிதல், கர்ப்பிணி தாய்மார்களுக்கு அல்ட்ராசோனாகிராம் பரிசோதனை, கண்புரை ஆய்வு, செமி ஆட்டோ அனலைசர் மூலம் பரிசோதனை, குழந்தைகள் தாய்மார்களுக்கு தடுப்பு ஊசி போடுதல் மற்றும் கொரோனா தடுப்பு ஊசி போடுதல் போன்றவைகளும் மேலும், டெங்கு, பன்றி காய்ச்சல் மற்றும் குடும்ப நலம், காசநோய், தொழுநோய்; குறித்த விழிப்பணர்வு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்குதல் ஆகியவைகளையும், சிறப்பு மருத்துவர்களான இதயநோய் மருத்துவர், சீறுநீரக மருத்துவர், பல் மருத்துவர், கண்மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், மனநல மருத்துவர், மற்றும் எலும்பு மூட்டு மருத்துவர் ஆகிய மருத்துவர்களைக் கொண்ட சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான மருத்துவ அட்டை பெறாத பொதுமக்கள், இம்முகாமில் பதிவு செய்து உடனடியாக பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இம்முகாமில் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பி.நாகைமாலி, மாவட்டச் செயலாளர் திரு.என்.கௌதமன், சுகாதார துறை துணை இயக்குநர் மரு.விஜயகுமார், இணை இயக்குநர் மரு.ராணி, வட்டார மருத்துவர் மரு.அரவிந்த்குமார், குடும்பநலத்துறை துணை இயக்குநர் மரு.ஜோஸ்லின், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

