விவசாயிகளைப் பாதிக்கும் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வேதாரண்யத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
விவசாயிகளை பாதிக்கின்ற முன்பு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், 8 பேரின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காத உத்தரப்பிரதேச அரசை பதவி விலகக் கோரியும் , தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வரும் சிங்கள ராணுவம் , கடற்கொள்ளையர்களின் அட்டூழியத்தை ஒன்றிய அரசு தடுக்க வலியுறுத்தியும் , விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை சமூக வலைத்தளங்களில் கொச்சைப்படுத்தி அவதூறு பரப்பும் சாதிவெறிக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் , பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் ஒன்றிய அரசை கண்டிக்க வலியுறுத்தியும் வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நாவேந்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . 5 கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு 30க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் சுமா. செல்வராசு ,அறிவழகன் , ஆனந்த பால் மற்றும் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இளந்தென்றல் உள்ளிட்ட விடுதலை சிறுத்தை
கள் கட்சியினர் கலந்து கொண்டனர்
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளார்.

