தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நடத்தும் மினி மாராத்தான் போட்டி; தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு 25-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தேசிய பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு இன்று 11.10.2021 தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரோச் பூங்காவில் இருந்து மினி மாராத்தான் போட்டி தொடங்கப்பட்டது.

அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவிகள் 100 பேர் கலந்து கொண்டணர்கள். முன்னதாக மினி மாராத்தான் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்/சார்பு நீதிபதி, திருமதி.M.பீரித்தா,M.L., கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.இளையராஜா, மூத்த வழக்கறிஞர் திருமதி.நீலவேணி, போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் திரு.மயிலேறும் பெருமாள், உடற்பயிற்சி கல்வி ஆசிரியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு போட்டியாளர்களை உச்சாகப்படுத்தினர். தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நடத்திய மினி மாராத்தான் போட்டியில் தூத்துக்குடி APC மகாலட்சுமி கல்லூரி மாணவி செல்வி.K.ஜெயபாரதி முதல் பரிசை தட்டிச்சென்றார். நடராஜன் மேல்நிலை பள்ளி மாணவியான செல்வி.சுதா லெட்சுமி இரண்டாம் பரிசை தட்டிச்சென்றார். மூன்றாவது வெற்றியும் நடராஜன் மேல்நிலை பள்ளி மாணவி செல்வி.அபிநயா தட்டிச்சென்றார். மேலும் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்/ சார்பு நீதிபதி திருமதி.M.பீரித்தா,M.L., வெற்றிக்கோப்பையை வழங்கி சிறப்பித்தார். இந்த மினி மாராத்தான் போட்டியை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஊழியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.

