மக்கள் குறைதீர்க்கும் நாள் – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் நலத்திட்டங்கள் வழங்கினார்
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தரைதளத்தில் நடைபெற்றது. மேலும், மனுக்கள் மூலமாக குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 138 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார்.


இதில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.67,500 க்கான வங்கிக் கடன் மானியத்தையும், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,08,000 மதிப்பீட்டில் மடக்கு சக்கர நாற்காலியினையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் ராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) குணசேகரன், மாவட்ட துணை ஆட்சியர் (பயிற்சி) சௌமியா, மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் சீனிவாசன், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

