• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலாளர் தேர்தல் நெருங்கும் வேளையில் டிஎஸ்எப் அணிக்கு ஆதரவு பெருகுகிறது !! எஸ் டி கே ராஜன் அணியினர் டிஎஸ்எப் அணிக்கு பகிரங்க ஆதரவு அளிக்க முன்வந்தனர் திருமண்டல தேர்தல் பரபரப்பு

policeseithitv by policeseithitv
October 11, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலாளர் தேர்தல் நெருங்கும் வேளையில்  டிஎஸ்எப் அணிக்கு ஆதரவு பெருகுகிறது !! எஸ் டி கே ராஜன் அணியினர் டிஎஸ்எப் அணிக்கு பகிரங்க ஆதரவு அளிக்க முன்வந்தனர் திருமண்டல தேர்தல் பரபரப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல லே செயலாளர் பதவிக்காக பல கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. தேர்தலில் எஸ்.டி.கே.ராஜன் அணி, டி.எஸ்.எப் அணி என இரு அணிகள் போட்டியிடுகின்றன எஸ் டி கே ராஜன் இரண்டு முறை லே செகரட்டரி ஆக இருந்ததால் இந்த முறை அவர் போட்டியிட முடியாது என்பதால் அவரது அணி சார்பாக ஜெபச்சந்திரன என்பவர் களமிறக்கப்பட்டார்
அந்த அணிக்கு எதிராக முன்னாள் லே செகரட்டரி மோகன் வட்டக் கோவில் ஜான்சன் இன்ஸ்டீன் மற்றும் போன்ற டயோசீசன் முக்கிய நபர்களின் பெரும் ஆதரவோடு டிஎஸ்எப் அணி சார்பில் முன்னாள் லே செக்கரட்டரி டிஎஸ்எப் துரைராஜ் அவர்களின் மகன் கிப்சன் லே வேட்பாளராக டிஎஸ்எப் அணி சார்பில் போட்டியிடுகிறார்.
இரு அணியினரும் பல்வேறு கட்ட தேர்தலை சந்தித்து வந்த நிலையில் லே செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் 20,21ம் தேதிகளில் நடைபெறவுள்ளது இந்த இறுதிகட்ட தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.லே செயலாளர், திருமண்டல உப தலைவர், குருத்துவச்செயலாளர்,பொருளாளர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மேற்கண்ட பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கக் கூடிய திருமண்டல பெருமன்ற உறுப்பினர்களும், குருவானவர்களும் சுமார் 360 பேர் ஓட்டுப்போட காத்திருக்கிறார்கள்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அடுத்தடுத்த கட்ட தேர்தலின்போதும் பல்வேறு அரசியல் காய்நகர்த்தல்கள் நடந்து வந்தன. ஓட்டுக்களை வேணுமென்றே தூக்கிவிட்டார்கள் என்றும், முறையாக தேர்தல் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட வில்லை என்றும் தேர்தல் நடக்கும் போது ஏஜென்டுகள் நியமிக்காமல் நடந்ததால் பல இடங்களில் குழப்பங்கள் ஏற்பட்டது என்றும் கள்ள ஓட்டுகள் போட்டதாகவும் கூறப்படுகிறது இப்படி பல்வேறு குற்றசாட்டுக்கள் கூறப்பட்டு வந்தது. எனினும் அத்தனை இடையூறுகளையும் கடந்து தேர்தல் பணி இறுதி கட்டத்தை தற்போது அடைந்திருக்கிறது.
இந்தநிலையில் எஸ்.டி.கே.ராஜன் அணியில் இருந்து தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்த சாயர்புரத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர் பல பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல குருவானவர்கள் ஆதரவோடு திடீரென டி.எஸ்.எப் அணிக்கு மாறிவந்துவிட தற்போது டி எஸ் எப் அணி கடும் உற்சாகத்தில் உள்ளது. சுமார் 40 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி உறுதி என தேர்தல் களத்தில் ஈடுபட்டுவந்த டி எஸ் எஃப் அணி தற்போது எஸ் டி கே ராஜன் அணியின் முக்கிய பிரபலமாக வலம் வந்த சாயர்புரம் சார்ந்த பெருமன்ற உறுப்பினர் திருமண்டலத்தில் பவர்ஃபுல் ஆக இருந்தார் அவருக்கு பல்வேறு குருவானவர்கள் மற்றும் பல பெருமன்ற உறுப்பினர்கள் நெருக்கமாக இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது இவர் திடீரென டிஎஸ் எஃப் அணிக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் இந்த அணி தற்போது வெற்றி அணியாக அடுத்த கட்டத்திற்கு காய் நகர்த்தி வருகிறது
இன்னும் லே செயலாளர் பதவிக்கு ஆன தேர்தல் நடைபெற பத்து தினங்களே உள்ள நிலையில்
டி எஸ் எப் அணி அனைத்து குருவானவர்கள் மற்றும் பெருமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து திருமண்டல நிர்வாகம் வெளிப்படையாக இருக்கும் கிட்லர் தர்பார் போல் நடந்து வந்த திருமண்டல நிர்வாகம் இனிமேல் கிறிஸ்தவர்களின் நன்மைக்காகவும் வளர்ச்சி பணிகளுக்காகவும் சிறந்த முறையில் நடைபெறும் என தாங்கள் பதவிக்கு வந்தான் திருமண்டலம் எவ்வாறு இருக்கும் என ஒரு விரிவான அறிக்கையை குருவானவர் மற்றும் பெருமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்
எஸ் டி கே ராஜன் அணியினர் தாம் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என அவர்களும் வியூகங்கள் வகுத்து இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இரண்டு அணிகளும் அதி தீவிர அரசியல் காய்நகர்த்தலில் ஈடுபட்டு வரும் நிலையில் டி எஸ் எப் அணி வேட்பாளர் கிப்சன் மிக எளிமையாகவும் அனைவரிடமும் அன்பாக பழக கூடியவர் பந்தா இல்லாமல் இவர செயல்படும் விதம் அனைவராலும் வரவேற்கப்படுகிறது டிஎஸ்எப் அணிக்கு பகிரங்கமாக ஆதரவளிக்க குருவானவர்கள் மற்றும் பெருமன்ற உறுப்பினர் தனித்தனியாக ரகசிய கூட்டம் நடத்தியுள்ளதாகவும் பேசப்படுகிறது வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தால் பல்வேறு இடையூறுகள் ஏற்படக்கூடும் என ரகசியமாக பெரும் மன்ற உறுப்பினர் மற்றும் குருவானவர்கள் வாக்களிக்க கூடிய இவர்கள் பத்து பேர் மற்றும் 20 பேர் கொண்ட குழு அமைப்பு ஏற்படுத்தி இந்த முறை நாசரேத் திருமண்டல த்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டுமென ரகசிய கூட்டம் போட்டு வருவதாகவும் பேசப்படுகிறது சாயர்புரம் முக்கிய பிரமுகர் டி எஸ் எஃப் அணிக்கு ஆதரவு தருவது அதிலிருந்து தற்போது கள நிலவரம் டி எஸ் எஃப் அணிக்கு ஆதரவாக திரும்பி வருகிறது.
சுமார் 360 பேர்களின் கடைசி நிமிட மனமாற்றமே லே செயலாளர் யார்? என்பதை நிர்ணயிக்கும் நேரமாகும் கருதப்படுகிறது இன்னும் பத்து தினங்களே உள்ள நிலையில் நமது பக்கம் எத்தனை வாக்குகள் உள்ளன நடுநிலை வாக்குகள் யார் அவர்களை நமது பக்கம் இழுப்பது எப்படி என போட்டோ போட்டி இரு அணிகளுக்கும் இடையே கடுமையாக நடைபெற்று வருகிறது தற்போது குதிரை பந்தயத்தில் டி எஸ் எப் அணி முன்னணியாக உள்ளது எனவும் தற்போதுள்ள ஸ்பீடு தொடர்ந்து இன்னும் பத்து தினங்கள் இருந்தால் டிஎஸ் பிஎஃப் அணி வெற்றி உறுதி என கிறிஸ்தவர்கள் மத்தியில் பேசப்படுகிறது இந்த முறை மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் கிறிஸ்தவர்கள் என்ற பேச்சுக்கு இன்னும் பத்து தினங்களில் விடை கிடைத்துவிடும்.

Previous Post

நாகை மாவட்டத்தில் ஐந்தாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்! தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு

Next Post

காலை தீபம் நாளிதழ் செய்தி எதிரொலி !! பல ஆண்டுகளாக போடாமல் இருந்த கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் ரோடு அமைக்கும் பணி தீவிரம்!!

Next Post
காலை தீபம் நாளிதழ் செய்தி எதிரொலி !! பல ஆண்டுகளாக போடாமல் இருந்த கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் ரோடு அமைக்கும் பணி தீவிரம்!!

காலை தீபம் நாளிதழ் செய்தி எதிரொலி !! பல ஆண்டுகளாக போடாமல் இருந்த கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் ரோடு அமைக்கும் பணி தீவிரம்!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In