• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகை மாவட்டத்தில் ஐந்தாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்! தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு

policeseithitv by policeseithitv
October 10, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகை மாவட்டத்தில் ஐந்தாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்!  தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகை மாவட்டத்தில் ஐந்தாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்!

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு!!
_______________

வேதாரண்யம் அக் 10
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற ஐந்தாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாமினை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம், மருந்து கொத்தள தெரு அரசு ஆரம்ப சுகாதாரநிலையம், அக்கரைப்பேட்டை திடீர்குப்பம், வடக்குப்பொய்கைநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி, திருப்பூண்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி,;, கீழையூர் ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப்பள்ளி, சமுதாயகூடம், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய கிராம சேவை மையம், வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் மாரியம்மன் கோவில், தாமரைப்புலம் நடுநிலைப்பள்ளி, வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் ராஜாஜி பூங்கா, தோப்புத்துறை அரசு நடுநிலைப்பள்ளி,; கருப்பம்புலம் அரசு மருத்துவமனை, தகட்டூர் நூலக கட்டிடம் ஆகிய இடத்தில் நடைபெற்ற ஐந்தாவது கொரோனா மாபெரும் தடுப்பூசி முகாமினையும், கருங்கண்ணி மற்றும் வேதாரண்யம் காந்தி நகரில் மொபைல் வாகனம் மூலம் வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்தும் முகாமினையும், நாலுவேதபதி கிராமத்தில் வீடு வீடுடாக சென்று தடுப்பூசி செலுத்தும் முகாமினையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஐந்தாவது மாபெரும் தடுப்பூசி முகாம் காலை 07.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை நடந்தது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், பள்ளிக் கல்லூரிகள் போன்ற இடங்களில் மாவட்டம் முழுவதும் 445 கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கபட்டு சுமார் 35,000 மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 68 சதவீத மக்கள் முதல் தவணை தடுப்பூசியினையும், 23 சதவீத மக்கள் இரண்டாம் தவணை தடுப்பூசியினையும் செலுத்தியுள்ளார்கள். இந்த சிறப்பு முகாமில் மீனவ கிராம பெருமக்கள் அனைவரும் இன்று ஒரு நாள் கடலுக்கு செல்லாமல் 100 சதவீதம் தடுப்பூசி போடும் இலக்கிற்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்கள். மேலும் கர்ப்;பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள். மாற்றுதிறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் மற்றும் இரத்தகொதிப்பு உள்ள அனைவரும் தவறாமல் தடுப்பூசி எடுத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
நாகை மாவட்டத்தை பொறுத்தவரை தலைஞாயிறு மற்றும் வடுகச்சேரி வட்டங்களில் உள்ள 15 கிராமங்களுக்கு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி இலக்கு எட்டப்பட்டுள்ளது. வடுகச்சேரி மற்றும் தலைஞாயிறு கிராமத்தில் 90 சதவீதம் மக்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நமது இலக்கு 100 சதவீதம் தடுப்பூசி போடப்படவேண்டும் அதை இலக்காக கொண்டு முகாம் நடைபெற்று வருகிறது.
மேலும் இம்மாவட்டதில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளது. இருப்பினும் பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். மேலும் பொதுமக்கள் அனைவரும் வெளியில் செல்லும்போது கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முதல் தவணை தடுப்பூசியினை செலுத்தி கொண்ட அனைவருமே, இரண்டாம் தவணை தடுப்பூசியினையும் செலுத்தி கொண்டால்தான் கொரோனா 3 ஆம் அலையிலிருந்து நம்மை காத்துகொள்ள முடியும்;. கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் வெல்ல தடுப்பூசி ஒன்றே பேராயுதம் எனவே அனைவரும் தவறாமல் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் விஜயகுமார், நகராட்சி ஆணையர் லதா, வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், வட்டாச்சியர் ரவி அவர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்

செய்தி தொகுப்பு
லயன் டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்

Previous Post

ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் மீண்டும் அகழாய்வு பணி   ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ., ஊர்வசி அமிர்தராஜ்  முன்னிலையில் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். 

Next Post

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலாளர் தேர்தல் நெருங்கும் வேளையில் டிஎஸ்எப் அணிக்கு ஆதரவு பெருகுகிறது !! எஸ் டி கே ராஜன் அணியினர் டிஎஸ்எப் அணிக்கு பகிரங்க ஆதரவு அளிக்க முன்வந்தனர் திருமண்டல தேர்தல் பரபரப்பு

Next Post
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலாளர் தேர்தல் நெருங்கும் வேளையில்  டிஎஸ்எப் அணிக்கு ஆதரவு பெருகுகிறது !! எஸ் டி கே ராஜன் அணியினர் டிஎஸ்எப் அணிக்கு பகிரங்க ஆதரவு அளிக்க முன்வந்தனர் திருமண்டல தேர்தல் பரபரப்பு

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலாளர் தேர்தல் நெருங்கும் வேளையில் டிஎஸ்எப் அணிக்கு ஆதரவு பெருகுகிறது !! எஸ் டி கே ராஜன் அணியினர் டிஎஸ்எப் அணிக்கு பகிரங்க ஆதரவு அளிக்க முன்வந்தனர் திருமண்டல தேர்தல் பரபரப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In