வேதாரண்யம் அடுத்த செம்போடை ஆர்.வி கல்வி நிறுவன வளாகத்தில் வேதாரண்யம் ரோட்டரி சங்கம், செம்போடை ஆர்.வி கல்வி நிறுவனங்கள், பாண்டிசேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் புயல் குமார் தலைமை வகித்தார். முகாமில் ரோட்டரி சங்க செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் கோவிந்தன், துணை ஆளுநர் மகாலெட்சுமி சால்ட் செந்தில், முன்னாள் துணை ஆளுநர் பாரத் லேப் துரைராஜ், மாவட்ட பொறுப்பாளர் கிரசண்ட் சிவகுமார், முன்னாள் தலைவர்கள் கருணாநிதி, ஆர்.வரதராஜன், என்.எஸ்.கருணாநிதி உட்பட ரோட்டரி உறுப்பினர்கள் ஆர்.வி.செந்தில், சொக்கலிங்கம், ராஜா, ஜெயச்சந்திரன், சதிஷ், லயன்ஸ் கிளப் கண்ணுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

