• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி பாராட்டினார்.

policeseithitv by policeseithitv
October 10, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி பாராட்டினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடியில் ஸ்பீடு ஸ்கேட்டிங் சங்கம் சார்பாக நடைபெற்ற 11வது மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு இன்று பரிசு வழங்கும் விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி பாராட்டினார்.

இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் நேரு யுவகேந்திராவில் இணைவு பெற்ற தூத்துக்குடி மாவட்ட ஸ்பீடு ஸ்கேட்டிங் சங்கம், ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த விளையாட்டு சங்கம் சார்பாக இன்று (10.10.2021) தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை ஸ்கேட்டிங் மைதானத்தில் 11வது மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இந்த ஸ்கேட்டிங் போட்டியில் 3 வயதிலிருந்து 16 வயதுக்குட்பட்ட பிரிவு மற்றும் 16 வயதிலிருந்து 20 வயதுக்குட்பட்ட பிரிவு என இரு பிரிவுகளிலும் மொத்தம் 65 மாணவ மாணவிகள் மாவட்டம் முழுவதிலும் இருந்து கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு இன்று பரிசு வழங்கும் விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி பாராட்டினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், மாணவ மாணவியர்களாகிய உங்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு விளையாட்டும் முக்கியமானதாகும். போட்டிகளில் வெற்றி தோல்வி என்பது சகஜமான ஒன்று. தேர்வுகளில் தோல்வியடையும் சில மாணவ மாணவியர்கள் அதை தாங்கி கொள்ள முடியாமல் தற்கொலை முடிவு எடுக்கின்றனர். இது முற்றிலும் தவறு. உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக்களில் பற்கேற்பதன் மூலம் வெற்றி தோல்வியை எதிர்கொள்ளக்கூடிய அளவிற்கு மனதைரியம் வரும். விளையாட்டுகளில் பங்கேற்பதன் மூலம் தலைமை பண்பை வளர்த்து கொள்ளலாம். ஒரு செயலை முழுவதுமாக செய்து முடிக்ககூடிய பண்பு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதால் மட்டுமே வரும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் கல்வியோடு விளையாட்டிலும் கலந்துகொள்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள் மேலும் மாநில அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு மென்மேலும் வெற்றிகள் பெற வேண்டும் என வாழ்த்தி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி ஸ்பீடு ஸ்கேட்டிங் சங்க தலைமை பயிற்சியாளர் முபாரக் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர் சிங், முத்து உதவும் கரங்கள் அமைப்பின் நிர்வாகி இப்ராஹீம் மற்றும் ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post

வேதாரண்யம் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

Next Post

ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் மீண்டும் அகழாய்வு பணி   ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ., ஊர்வசி அமிர்தராஜ்  முன்னிலையில் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். 

Next Post
ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் மீண்டும் அகழாய்வு பணி    ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ., ஊர்வசி அமிர்தராஜ்  முன்னிலையில் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். 

ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் மீண்டும் அகழாய்வு பணி   ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ., ஊர்வசி அமிர்தராஜ்  முன்னிலையில் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In