நெல்லை மாவட்டம் பிராஞ்சேரி அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான விவசாய பண்ணை உள்ளது
இந்த பண்ணை வாயிலாக சுமார் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்
இந்து அறநிலை துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்த பண்ணையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் அறநிலையத்துறை நெருக்கடி கொடுப்பதாகவும் விவசாயிகளை நசுக்குவதாகவும் கூறி சேரன்மகாதேவி ஒன்றிய இந்து முன்னணி அமைப்பினர் குழிக்குள் இறங்கி நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்
போராட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார்
போராட்டத்தில் கோபாலசமுத்திரம் பத்தமடை பிரான் சேரி மேலச்செவல் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டார்கள்

