நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 18 ஏக்கர் பரப்பிலான வேதாமிர்த ஏரி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த ஏரியை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தூர்வாரும் பணியை தொடங்கி ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதியின் கீழ் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. மேற்குப் புறத்தில் ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டு நிதியின் கீழ் ஆறரை கோடி செலவில் தடுப்புச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது . ஏரியின் நடுவே நீராழி மண்டபம் அமைக்கப்பட்டு நந்தீஸ்வரர் ஆலயம் அமைக்கப்படுகிறது.

நந்தீஸ்வரர் ஆலயத்தை முன்னாள் அமைச்சரும் வேதாரணியம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ. எஸ். மணியன் தன்னுடைய சொந்த நிதியின் கீழ் கட்டி வருகிறார். அதில் வைக்கப்படும் நந்தீஸ்வரரை நிர்மானிக்கும் பணி இன்று நடைபெற்றது. ஒரே கல்லால் ஆன நந்தீஸ்வரர் கிரேன் மூலம் மண்டபத்தின் நடுவே பூஜைகளுக்குப் பின் நிர்மானிக்கப்பட்டது.
இதில் சட்டப்பேரவை உறுப்பினர் ஓ. எஸ். மணியன் அறங்காவல் குழு தலைவர் கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சுப்பையன், திலீபன் ,வழக்கறிஞர் நமச்சிவாயம், நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் சுரேஷ்பாபு மற்றும் அம்பிகா தாஸ் , ஜெகநாதன் , ராஜரத்தினம் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தி தொகுப்பு: Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளார்.

